கொழும்பு : "போரில் இருந்து தப்ப வேண்டும்; விடுதலைப் புலிகளிடமும் சிக்கிவிடக்கூடாது' என்று நினைக்கும் தமிழ் இளைஞர்கள், இப்போது, கத்தார் நோக்கி, "படையெடுக்க' ஆரம்பித்துவிட்டனர்.
எதற்காக ...? "அங்கு போனால் கை நிறைய சம்பாதிக்கலாம்; அமைதி திரும்பியதும், இலங்கைக்கு வரலாம்' என்ற எண்ணத்தில் தான். யாழ்ப்பாணம், திரிகோணமலை பகுதியில் உள்ள பெரும்பாலான, தமிழ் இளைஞர்கள், பெண்களிடம் இந்த எண்ணம் உள்ளது. அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பலரும், பணத்தை சிறிது சிறிதாக சேர்த்து, கத்தார் போக தயாராகி விடுகின்றனர். மேற்காசியாவில் வளைகுடா பகுதியில் உள்ள கத்தாரில், பணியாள் வேலை கிடைத்தாலே, பல ஆயிரம் சம்பாதிக்க முடியும். இலங்கைத் தமிழ் இளைஞர்கள், பெண்களுக்கு அங்கு, இந்த வேலை கிடைப்பது சுலபமாக உள்ளது. இலங்கையில் இருந்தால், ஒரு பக்கம் ராணுவம் மிரட்டுகிறது; இன்னொரு பக்கம், விடுதலைப் புலிகள் அழைத்து சென்று விடுகின்றனர் என்ற பயம் தான், இந்த இளைஞர்களை கத்தார் செல்ல வைக்கிறது. இலங்கையில், 1983ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுடன் ராணுவம் போரிட ஆரம்பித்ததில் இருந்து, ஒவ்வொரு முறையும், திரிகோணமலை, யாழ்ப்பாண பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கு, அகதி முகாம்களில் தான் அடைக்கலம். ராணுவ கெடுபிடி அதிகம் இருக்கும் என்பதால், பள்ளிகளில் படிக்கவும் முடியாது; வேலைக்கு செல்லவும் வழியில்லை. அப்படியும், தப்பிச் சென்று, கொழும்பு வழியாக, கத்தார் போய்விட்டனர் சிலர். அவர்கள் எல்லாரும், கத்தாரில் வேலை செய்து வருகின்றனர். அவர்களின் உறவினர்களும், கத்தார் போய்விட்டனர். இதைப்பார்த்து தான், இப்போது பல இளைஞர்ளும், கத்தார் கனவில் உள்ளனர். கொழும்பு வழியாகத்தான் கத்தார் போக முடியும். கொழும்புக்கு வரவே, தமிழர்களுக்கு, "விசா' கிடைப்பது மிகவும் கஷ்டமான விஷயம். திரிகோணமலையில் இருந்து கொழும்பு வர, முன்பெல்லாம் சில மணி நேரம் ஆகும். ஆனால், இப்போது மூன்று வாரம் பிடிக்கிறது. ஆறாயிரம் ரூபாய் இருந்தால், கத்தார் போய்ச் சேர முடியும். வேலை கிடைக்க தனியார் ஏஜென்ட்டுக்கு பணம் தர வேண்டும். கடந்த சில காலமாக, விடுதலைப் புலிகள் ராணுவம் இடையே போர் இல்லாமல் இருந்ததால், தமிழ் இளைஞர்கள் நிம்மதியாக இருந்தனர். போர் வந்துவிட்டால், தமிழ் இளைஞர்களுக்கு பிரச்னை தான். அவர்களை பிடித்து சென்று ராணுவ பயிற்சி அளித்து, தங்கள் படையில் சேர்த்து விடுவர் புலிகள். இப்போது மீண்டும் பிரச்னை அதிகரித்து வருவதால், பல தமிழ் இளைஞர்களும், கத்தார் நோக்கி "படையெடுக்க' தயாராகி விட்டனர்.
தினமலர்
Sunday, 1 July 2007
முஸ்லிம் பெண்கள் நீச்சல் பழக பிரிட்டனில் "பர்க்கினி' உடை
லண்டன் : நீச்சல் பழகும் முஸ்லிம் மாணவிகளுக்கு தனி நீச்சல் உடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பெயர் "பர்க்கினி' உடை. பர்தா பிகினி இணைத்து தயாரிக்கப்படும் இந்த உடையை, முஸ்லிம் மாணவிகள் அணிந்து, நீச்சல் பழக அனுமதிக்க வேண்டும், என்று லண்டன் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற மாணவிகள் போல, நீச்சல் உடையை அணிந்து, நீச்சல் பழக முஸ்லிம் பெண்கள் தயாரில்லை. அதனால், நீச்சல் உடை அணிந்தாலும், உடலை முழுக்க மறைக்கும் வகையில், வேறு உடை அணிந்து கொண்டனர். இதை அறிந்த பிரபல நீச்சல் உடை நிறுவனம், முஸ்லிம் மாணவிகள் பயன்படுத்தும் வகையில், பர்தா மற்றும் நீச்சல் உடை இணைந்த டிரஸ்சை தயாரித்து, அதற்கு, "பர்க்கினி' என்று பெயரிட்டது. தலை முதல் கால் வரை உடலை மறைத்து தயாரிக்கப்பட்ட நீச்சல் உடை இது. விலை ரூ. 2,500 . மேற்கு லண்டன் பகுதியில்,சில இடங்களில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகம். அங்குள்ள பள்ளிகளில், நீச்சல் பழகும் முஸ்லிம் மாணவிகள், இந்த புது உடையை அணிந்து, நீச்சல் பழக அனுமதிக்க நகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நீச்சல் உடை கம்பெனிக்கு, "ஆன் லைன்' மூலம், "பர்க்கினி' உடைக்கு ஏகப்பட்ட ஆர்டர்கள் குவிந்துவிட்டன.
கணிதத்தில் திறமையா?: சுட்டுவிரல் காட்டிவிடும்
கணிதம் மற்றும் மொழிப் பாடங்களில் சிறுவர், சிறுமிகளுக்கு இயற்கையாக உள்ள திறன் அவர்களின் விரல்களின் நீளத்தை கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. பிரிட்டனில் பாத் என்ற நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் உளவியல் துறையில் பணியாற்றுபவர் டாக்டர் மார்க் புரோஸ்நான். இவர், “சைக்காலஜி’ என்ற பத்திரிகையில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஆறு வயது முதல் ஏழு வயது வரை உள்ள 75 சிறுவர், சிறுமியர் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். கை விரல்களின் நீளத்துக்கு ஏற்றவாறு அவர்களின் கணிதம் மற்றும் மொழிப் பாடங்களின் திறமை வெளிப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது. மோதிர விரலை விட நீளம் குறைவாக உள்ள சுட்டு விரலை கொண்ட சிறுவர்கள் கணிதத்தில் திறமையானவர்களாக உள்ளனர். சிறுமிகளில் மோதிர விரல் மற்றும் சுட்டு விரல் ஒரே அளவாக இருந்தால் அவர்கள் மொழிப் பாடங்களில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றனர்.
இவ்விரல்களின் அளவுகள் மாறுபட்டு இருந்தால் தோற்றத்தில் தனித்தன்மை, விளையாட்டுத் திறன், அவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் சிக்கல் ஆகியவை குறித்து அறியவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விரல்களின் அளவுகள் மாறுபட்டு இருந்தால், படிப்பில் படு சுட்டியாக உள்ள தன்மை இயற்கையாகவே அமைந்து விடுகிறது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
தாயின் கர்ப்பபையில் இருக்கும் போதே குழந்தைகளின் விரல்களின் நீளம் முடிவு செய்யப்பட்டு விடுகிறது. இதை டெஸ்டிர டோன் மற்றும் எஸ்ட்ரோஜென் ஆகிய சுரப்பிகள் தான் முடிவு செய்கின்றன. இதில், டெஸ்டிரடோன் சுரப்பிகள் அதிகளவில் செயல்பட்டால், மோதிர விரலை விட சுட்டு விரலின் நீளம் குறைவாக இருக்கும். எஸ்ட்ரோஜென் சுரப்பிகள் அதிகளவில் செயல்பட்டால் இரு விரல்களின் நீளம் ஒரே அளவில் இருக்கும். இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறுத்தையை பிடிக்க “மொபைல் போன்’
சிறுவனைக் கொன்ற சிறுத்தையை பிடிக்க உதவியுள்ளது மொபைல் போன், “ரிங்டோன்!” குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் சம்பா வனப்பகுதியில் உள்ள சிறுத்தை, ஊருக்குள் புகுந்து, ஒரு சிறுவனைக் கொன்று விட்டது. காட்டுக்குள் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க, வனத்துறை அதிகாரிகள் கடும் முயற்சி செய்து வந்தனர். வீட்டுச்சேவல் இருந்தால், அதை காட்டுக்குள் அனுப்பினால், அதைத் தேடி சிறுத்தை வரும். மொபைல் போனில், சேவல் கூவுவது போன்ற ரிங்டோன் ஒலி எழுப்ப வைத்தனர். சில நிமிடங்களில், புதர்ப்பகுதியில் மறைந்திருந்த சிறுத்தை, மெல்ல மெல்ல தலைதுõக்கி, பதுங்கியபடி நடக்கத் துவங்கியது. தொடர்ந்து, “ரிங்டோன்’ ஒலி எழுப்பியதால், அந்த ஒலியை பின்பற்றி, சிறுத்தையும் வரத்துவங்கியது. சிறுத்தை வெளியே வந்ததும், தயாராக இருந்த வலையை விரித்து, அதில் சிக்க வைத்தனர் அதிகாரிகள்.
இந்த சிறுத்தை, கடந்த மூன்று மாதமாகவே, கிராமங்களில், அட்டகாசம் செய்து வந்துள்ளது. அதைப்பிடிக்க, கூண்டில் சேவலை கட்டி வைத்தனர். அது கத்தியும், சிறுத்தை வரவே இல்லை. கூண்டை பார்த்ததும், ஓடிவிட்டது. அப்போது தான் வனத்துறை அதிகாரிக்கு, மொபைல் போன் “ரிங்டோன்’ நினைவு வந்தது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரி சதிஷ் புரோஹித் கூறு கையில், “சேவல் கூவுவது போன்ற ரிங்டோனை மொபைல் போனில் என் நண்பர் பயன்படுத்தி வந்தது, எனக்கு திடீர் என்று நினைவுக்கு வந்தது. உண்மையான சேவலை கூண்டில் வைத்தால், கூண்டை பார்த்து சிறுத்தை ஓடிவிடுகிறது. இப்படி “ரிங் டோன்’ மூலம் சேவல் கூவுவது போல செய்தால், சிறுத்தை வெளியே வந்து தேடும். அப்போது பிடித்துவிடலாம் என்று கணக்கு போட்டோம்; அது கைகொடுத்தது. வலையை விரித்து பிடித்துவிட்டோம்’ என்றார்.

28 ஆண்டுகளாக பஹ்ரெய்னில் தவிக்கும் இந்தியர்
பஹ்ரெய்னில் இருந்து நாடு திரும்ப முடியாமல், கேரளாவைச் சேர்ந்தவர் 28 ஆண்டுகளாக தவித்து வருகிறார். ஆறு இலட்சம் ருபா டெலிபோன் பில் செலுத்தினால் மட்டுமே அவர் நாடு திரும்ப முடியும். கேரளாவைச் சேர்ந்த முகம்மது கருப்பன் (52). இவரது குடும்பத்தில் இவர் மட்டுமே சம்பாதிக்கிறார். முகம்மது கருப்பனுக்கு அவரது 24 ஆவது வயதில் பஹ்ரெய்னில் வேலை கிடைத்தது. 28 ஆண்டுகளுக்கு முன், வேலையில் சேர்;ந்தார். தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள, மொபைல் போன் வாங்கினார். முகம்மது கருப்பனை ஏமாற்றி அவரது நன்பரும் அதே மொபைல் போனை பயன்படுத்தினார். அவர் மட்டுமன்றி, பலருக்கும் மொபைல் போனை பயன்படுத்த வாடகைக்கு கொடுத்தார். ஏகப்பட்ட சர்வதேச அழைப்புகள் அந்த மொபைல் போனிலிருந்து அழைக்கப்பட்டன. ஒரு மாதத்தில் ஆறு இலட்சம் ருபா டெலிபோன் பில் வந்தது. சற்றும் எதிர்பார்க்காத அப்பெரியதொரு தொகையினை முகம்மது கருப்பனால் செலுத்த முடியவில்லை. இதையடுத்து, மொபைல் போன் ணைப்புத் துண்டிக்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தியா திரும்புவதற்காக துபாயில் உள்ள பாஸ்போர்ட் மற்றும் குடியகழ்வுத்துறை இயக்குனரின் அலுவலகத்துக்கு விண்ணப்பித்தார். ஆனால், டெலிபோன் பில் பாக்கித் தொகையை செலுத்தினால் மட்டுமே நாட்டுக்கு செல்ல முடியும் என்று, அதிகாரிகள் தெரிவித்துள்ளளர்.
வேறுவழியின்றி, தொடர்ந்து வேலை பார்த்து வருகிறார். கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு, ஆதரிப்பார் யாருமில்லை. இதனால் தனது சம்பளத்தில் பெரும்பகுதியை தன் குடும்பத்தினரு;ககு அனுப்பவேண்டிய கட்டாயத்திலுள்ளார் முகம்மது கருப்பன். மாதம் 30,000 ரூபாவினை குடும்பத்தினருக்கு அனுப்பி வருகிறார்.
சேமிப்பதற்கும் வழியில்லை. குடும்பத்தினருக்கும் அனுப்ப வேண்டும் என்பதால், டெலிபோன் பில் செலுத்துவதென்பது முடியாத காரியமாகிவிட்டது. சாகும்வரை பஹ்ரெய்னில் தான் இருக்க வேண்டிய நிலையிலுள்ள அவருக்கு குடும்பத்தினரை புகைப்படங்களில் பார்ப்பதென்பதைத் தவிர நேரடியாகப் பார்ப்பதென்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று முகம்மது கருப்பன் பஹ்ரெய்னின் வெளிநாட்டவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு பரிதாபமாகத் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சாதனை: 7 வயது சிறுமி 10-ம் வகுப்பு `பாஸ்’ செய்தாள்

கூலித் தொழிலாளியின் மகளான 7ஷி வயது சிறுமி, 10-ம் வகுப்பில் பாஸ் செய்து அகில இந்திய அளவில் புதிய சாதனை படைத்து இருக்கிறாள். அந்த சிறுமியின் பெயர் சுஷ்மா வர்மா. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். சிறுமி சுஷ்மா 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்தாள். இவளுடைய தந்தை தேஜ் பகதூர் வர்மா. கூலித்தொழிலாளி. தாய் சாயா. குடும்பத்தலைவி. வறுமை காரணமாக சுஷ்மாவை அவளது பெற்றோர், பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை. ஆனால் சுஷ்மா பொது அறிவில் சிறந்து விளங்கினாள். அவளுடைய கல்வி திறனை பார்த்து பொதுமக்கள் மட்டுமின்றி மாநில பள்ளிக் கல்வித்துறையும் ஆச்சரியத்தில் மூழ்கியது. இதையடுத்து லக்னோ செயின்ட் மீனா பள்ளியில் சுஷ்மாவை 9-ம் வகுப்பில் நேரடியாக சேர்த்துக் கொள்ள கல்வித்துறை அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு அவள் 10-ம் வகுப்பு மெட்ரிகுலேஷன் பரீட்சை எழுதினாள். 7வயது சிறுமி மெட்ரிக் எழுதும் தகவல் அறிந்ததும் பத்திரிகைகளும், டி.வி.க்களும் சுஷ்மாவை பற்றி பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. அளவுக்கு அதிமான விளம்பரத்தால் சுஷ்மாவின் திறமை பாதிக்கப்படலாம் என்று பள்ளி நிர்வாகம் கவலை அடைந்தது.
சாதனை
உ.பி.மாநில மெட்ரிகுலேஷன் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சிறுமி சுஷ்மா 600-க்கு 354 மதிப்பெண்கள் வாங்கி தேர்வு பெற்றாள். அவள் இந்தியில் 58, ஆங்கிலத்தில் 60, கணிதத்தில் 66, விஞ்ஞானத்தில் 63, சமூக அறிவியலில் 68, கம்ப்ïட்டர் பாடத்தில் 39 மதிப்பெண்கள் பெற்று இருந்தாள்.
இதற்கு முன்பு பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த துளசி என்ற 9 வயது சிறுமி மெட்ரிகுலேசன் பரீட்சையில் பாஸ் செய்து இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த சாதனையை படைத்த மாணவி என்ற பெருமையை பெற்று இருந்தாள். அந்த சாதனையை இப்போது சுஷ்மா முறியடித்து விட்டாள்.
அவளுக்கு சக மாணவிகள் இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர். சாதனை படைத்த சுஷ்மா கூறுகையில், “கம்ப்ïட்டர் பாடத்தில் மார்க் குறைந்ததால் முதல் வகுப்பில் பாஸ் செய்ய முடியாமல் போய் விட்டதே என்பதுதான் தனது வருத்தம்” என்று குறிப்பிட்டாள்.
சுஷ்மாவின் குடும்பத்தை பொறுத்தவரை அவள் மட்டுமின்றி அவளுடைய அண்ணன் சைலேந்திரனும் அறிவு ஜீவிதான். இவன் 11-வது வயதில் 12-ம் வகுப்பு பாஸ் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவன். ஆங்கிலத்தில் இவனுடைய அபார திறமையை பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அவனுக்கு மேல்படிப்புக்கு இடம் கிடைத்தது. ஆனால் பண வசதி இல்லாததால் அவன் அமெரிக்கா போக முடியவில்லை.

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பரீட்சையில் `இரட்டை’ சகோதரிகளின் ஆச்சரிய சாதனை: அனைத்து பாடங்களிலும் ஒரே மார்க்

விவரம் தெரிந்த நாள் முதல் இன்றுவரை எண்ணத்திலும், செயலிலும் எப்போதும் ஒன்றாகவே இருக்கும் இரட்டைப் பிறவி மாணவிகள் சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பாட வாரியாகவும், மொத்தமாகவும் ஒரே மார்க்குகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். விடுமுறைக்காக இப்போது சென்னை வந்து இருக்கும் இவர்களது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம், சாரங்க்பூர். அங்குள்ள ஆஷா மாடர்ன் பள்ளியில் படித்த இவர்கள், பள்ளியிலும், சாரங்க்பூர் மாவட்ட அளவிலும் முதலிடத்தை பிடித்துள்ளனர். இரட்டை பிறவி என்பது புதிதல்ல. பெரும்பாலான இரட்டை பிறவிகளில் ஒருவருக்கும் மற்றொருவருக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கும். ஆனால், உத்தரபிரதேசம் மாநிலம், சாரங்க்பூரில் வசிக்கும் புவன் ஜெயின்-சந்த்னா ஜெயின் தம்பதிக்கு பிறந்த இரட்டை பிறவி பெண் குழந்தைகள் நிறத்திலும், முகத்தோற்றத்திலும், உடல் அமைப்பிலும் அச்சில் வார்த்தார் போல ஒன்று போல இருக்கிறார்கள்.
இதனால், அவர்களது பெற்றோரை தவிர மற்ற யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இரட்டை பிறவி பெண் குழந்தைகளில் மூத்தவர் ரூபாலி ஜெயின் (16), இளையவர் சோனாலி ஜெயின் (16).
இதனால், அவர்களது பெற்றோரை தவிர மற்ற யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இரட்டை பிறவி பெண் குழந்தைகளில் மூத்தவர் ரூபாலி ஜெயின் (16), இளையவர் சோனாலி ஜெயின் (16).
கல்விப்பணியில்
புவன் ஜெயின் குடும்பம் கல்விப்பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபட்டுள்ளது. ஆஷா மாடர்ன் பப்ளிக் ஸ்கூல், ஆஷா மாடர்ன் ஸ்கூல், ஆஷா மாடர்ன் ப்ரீ-நர்சரி, நர்சரி பள்ளி ஆகிய 3 பள்ளிகளை நடத்தி வருகிறார்கள். இந்த பள்ளிகள் சாரங்க்பூரில் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
பிளஸ்-2 வரை உள்ள ஆஷா மாடர்ன் பள்ளியில் தான் இந்த இரட்டையர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் முதல்வராக இவர்களின் தந்தை புவன் ஜெயின் இருக்கிறார். தாய் சந்த்னா ஜெயின், ஆஷா மாடர்ன் பப்ளிக் பள்ளி முதல்வராக இருக்கிறார்.

தந்தையே பள்ளி முதல்வராக இருப்பதால் இரட்டைப்பிறவி பெண் குழந்தைகள் இதுவரை எல்லா வகுப்புகளிலும் ஒரே மார்க்குகள் வாங்குகிறார்களோ என்று சந்தேகம் எழுந்தது. அதை முறியடிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன் வெளியான சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த இரட்டையர்கள் பாட வாரியாகவும், மொத்தமாகவும் ஒரே மார்க்குகள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த அபூர்வ சகோதரிகள் தங்களது தாய், தந்தையுடன் சென்னையில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்துள்ளனர். இரட்டைப்பிறவி சகோதரிகள் பற்றி அவர்களின் தாய் சந்த்னா ஜெயின் நமது நிருபரிடம் கூறியதாவது:-
ஒற்றுமை எங்களது இரட்டைப்பிறவி பெண்கள் பிறப்பிலும் மட்டுமல்ல. அனைத்து எண்ணங்களிலும், செயல்களிலும் எப்போதும் ஒன்றாக இருப்பது எங்களுக்கே வியப்பாக இருக்கிறது. அவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் எடுத்து எங்கள் குடும்பத்தை ஆச்சர்யத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளனர். பெண் குழந்தைகளை வெறுக்கும் இந்த காலத்தில் எங்களது பெண் குழந்தைகள் பெருமை தேடிக்கொடுத்துள்ளனர்.
இரட்டைப்பிறவி பெண்களான ரூபாலி ஜெயினும், சோனாலி ஜெயினும் ஒற்றுமையின் இலக்கணமாக திகழ்கின்றனர். காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை ஒன்றாகவே இருப்பார்கள். காலையில் ஒருத்தி வேகமாக எழுந்துவிட்டால் மற்றவள் எழுந்திருக்கும் வரை படுக்கையிலே காத்திருப்பாள். அதுபோல காலைக் கடன்களை முடித்துவிட்டு டிபன் சாப்பிட இருவரும் ஒன்றாகவே வந்து சாப்பிடுவார்கள். இதுபோலவே மதியம் மற்றும் இரவிலும் சாப்பிடுகிறார்கள்.

விட்டுக் கொடுக்காத தன்மை
பாட்டு, நடனம், ஓவியம் என எந்த பொழுது போக்கானாலும் இவர்களது ஒற்றுமை அங்கே பளிச்சிடும். பெற்றோருடன் சிறிது நேரம் டி.வி. பார்த்துவிட்டு ஒன்றாகவே படுக்கைக்கு போய்விடுவார்கள். எந்த செயலையும் திட்டமிட்டு செய்வது இவர்களது சிறப்பு அம்சம். இவர்களது ஒற்றுமையும், விட்டு கொடுக்கும் மனப்பான்மையும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறது.
கோபத்தில் ஒருத்தியை நான் திட்டிவிட்டால் மற்றவள் விட்டுக் கொடுக்கமாட்டாள். ரூபாலி கண் கலஙëகினால், சோனாலியும் கண் கலங்கி விடுவாள். அனைத்து பழக்க வழக்கங்களிலும் இருவரது குணாதிசயங்களும் ஒன்றுபோல இருப்பது வியப்பிலும் வியப்பு.
முதன்முறையாக மாற்று உடையில்
ஒருபோதும் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். படிப்பதற்கு நேரம் காலம் பார்ப்பதில்லை. சாப்பிடும் போது கூட இருவரும் படித்துக் கொண்டே இருப்பார்கள். இருவரும் ஒரே மாதிரியான டிசைன், நிறம் கொண்ட ஆடைகளை தேர்வு செய்வார்கள். காலில் போடும் செருப்பு முதல் முடி அலங்காரம் வரை என எல்லாம் ஒன்றுபோல இருக்கும்.
கோடை விடுமுறைக்காக சென்னை வந்திருக்கிறார்கள். இங்கு, இருவருக்கும் வெவ்வேறு நிறத்தில் பாட்டி துணி எடுத்துக் கொடுத்துள்ளார். வாழ்க்கையில் இன்று தான் முதல் முறையாக இருவரும் வெவ்வேறு நிற துணியை கட்டியுள்ளனர்.

அற்புத படைப்பு
இருவரும் 8-ம் வகுப்பு படித்தபோது, மொத்த மார்க்குகளில் ரூபாலிக்கு 2 மதிப்பெண்கள் குறைவாக கிடைத்தது. இதனால், சோனாலி தாமாக முன்வந்து தனக்கு இரண்டு மதிப்பெண்களை குறைத்து இருவரின் மார்க்குகளை சமமாக்க வேண்டுëம் என்று ஆசிரியரிடம் கேட்டார். ஆனால், அதற்கு ஆசிரியர் மறுத்துவிட்டார். இரண்டு பேரும் 2 நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இவர்களின் ஒழுக்கமும், நேரம் தவறாமையும் கருத்தில் கொண்டு சோனாலியின் கோரிக்கை ஏற்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்காலத்தில் வணிகவியல் பாடம் படிக்க வேண்டும் என்ற லட்சியத்திலும் ஒன்றாகவே இருக்கிறார்கள் இந்த இரட்டைப்பிறவி மாணவிகள். ஆண்டவனின் படைப்பில் எத்தனையோ அற்புதங்கள் உள்ளன. இந்த இரட்டைப்பிறவி குழந்தைகளின் எண்ணத்திலும், செயல்பாட்டிலும் அந்த அற்புதத்தை காண முடிகிறது.

Subscribe to:
Posts (Atom)