Sunday, 1 July 2007

சிறுத்தையை பிடிக்க “மொபைல் போன்’

சிறுவனைக் கொன்ற சிறுத்தையை பிடிக்க உதவியுள்ளது மொபைல் போன், “ரிங்டோன்!” குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் சம்பா வனப்பகுதியில் உள்ள சிறுத்தை, ஊருக்குள் புகுந்து, ஒரு சிறுவனைக் கொன்று விட்டது. காட்டுக்குள் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க, வனத்துறை அதிகாரிகள் கடும் முயற்சி செய்து வந்தனர். வீட்டுச்சேவல் இருந்தால், அதை காட்டுக்குள் அனுப்பினால், அதைத் தேடி சிறுத்தை வரும். மொபைல் போனில், சேவல் கூவுவது போன்ற ரிங்டோன் ஒலி எழுப்ப வைத்தனர். சில நிமிடங்களில், புதர்ப்பகுதியில் மறைந்திருந்த சிறுத்தை, மெல்ல மெல்ல தலைதுõக்கி, பதுங்கியபடி நடக்கத் துவங்கியது. தொடர்ந்து, “ரிங்டோன்’ ஒலி எழுப்பியதால், அந்த ஒலியை பின்பற்றி, சிறுத்தையும் வரத்துவங்கியது. சிறுத்தை வெளியே வந்ததும், தயாராக இருந்த வலையை விரித்து, அதில் சிக்க வைத்தனர் அதிகாரிகள்.
இந்த சிறுத்தை, கடந்த மூன்று மாதமாகவே, கிராமங்களில், அட்டகாசம் செய்து வந்துள்ளது. அதைப்பிடிக்க, கூண்டில் சேவலை கட்டி வைத்தனர். அது கத்தியும், சிறுத்தை வரவே இல்லை. கூண்டை பார்த்ததும், ஓடிவிட்டது. அப்போது தான் வனத்துறை அதிகாரிக்கு, மொபைல் போன் “ரிங்டோன்’ நினைவு வந்தது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரி சதிஷ் புரோஹித் கூறு கையில், “சேவல் கூவுவது போன்ற ரிங்டோனை மொபைல் போனில் என் நண்பர் பயன்படுத்தி வந்தது, எனக்கு திடீர் என்று நினைவுக்கு வந்தது. உண்மையான சேவலை கூண்டில் வைத்தால், கூண்டை பார்த்து சிறுத்தை ஓடிவிடுகிறது. இப்படி “ரிங் டோன்’ மூலம் சேவல் கூவுவது போல செய்தால், சிறுத்தை வெளியே வந்து தேடும். அப்போது பிடித்துவிடலாம் என்று கணக்கு போட்டோம்; அது கைகொடுத்தது. வலையை விரித்து பிடித்துவிட்டோம்’ என்றார்.

No comments: