Sunday, 1 July 2007

28 ஆண்டுகளாக பஹ்ரெய்னில் தவிக்கும் இந்தியர்

பஹ்ரெய்னில் இருந்து நாடு திரும்ப முடியாமல், கேரளாவைச் சேர்ந்தவர் 28 ஆண்டுகளாக தவித்து வருகிறார். ஆறு இலட்சம் ருபா டெலிபோன் பில் செலுத்தினால் மட்டுமே அவர் நாடு திரும்ப முடியும். கேரளாவைச் சேர்ந்த முகம்மது கருப்பன் (52). இவரது குடும்பத்தில் இவர் மட்டுமே சம்பாதிக்கிறார். முகம்மது கருப்பனுக்கு அவரது 24 ஆவது வயதில் பஹ்ரெய்னில் வேலை கிடைத்தது. 28 ஆண்டுகளுக்கு முன், வேலையில் சேர்;ந்தார். தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள, மொபைல் போன் வாங்கினார். முகம்மது கருப்பனை ஏமாற்றி அவரது நன்பரும் அதே மொபைல் போனை பயன்படுத்தினார். அவர் மட்டுமன்றி, பலருக்கும் மொபைல் போனை பயன்படுத்த வாடகைக்கு கொடுத்தார். ஏகப்பட்ட சர்வதேச அழைப்புகள் அந்த மொபைல் போனிலிருந்து அழைக்கப்பட்டன. ஒரு மாதத்தில் ஆறு இலட்சம் ருபா டெலிபோன் பில் வந்தது. சற்றும் எதிர்பார்க்காத அப்பெரியதொரு தொகையினை முகம்மது கருப்பனால் செலுத்த முடியவில்லை. இதையடுத்து, மொபைல் போன் ணைப்புத் துண்டிக்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தியா திரும்புவதற்காக துபாயில் உள்ள பாஸ்போர்ட் மற்றும் குடியகழ்வுத்துறை இயக்குனரின் அலுவலகத்துக்கு விண்ணப்பித்தார். ஆனால், டெலிபோன் பில் பாக்கித் தொகையை செலுத்தினால் மட்டுமே நாட்டுக்கு செல்ல முடியும் என்று, அதிகாரிகள் தெரிவித்துள்ளளர்.
வேறுவழியின்றி, தொடர்ந்து வேலை பார்த்து வருகிறார். கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு, ஆதரிப்பார் யாருமில்லை. இதனால் தனது சம்பளத்தில் பெரும்பகுதியை தன் குடும்பத்தினரு;ககு அனுப்பவேண்டிய கட்டாயத்திலுள்ளார் முகம்மது கருப்பன். மாதம் 30,000 ரூபாவினை குடும்பத்தினருக்கு அனுப்பி வருகிறார்.
சேமிப்பதற்கும் வழியில்லை. குடும்பத்தினருக்கும் அனுப்ப வேண்டும் என்பதால், டெலிபோன் பில் செலுத்துவதென்பது முடியாத காரியமாகிவிட்டது. சாகும்வரை பஹ்ரெய்னில் தான் இருக்க வேண்டிய நிலையிலுள்ள அவருக்கு குடும்பத்தினரை புகைப்படங்களில் பார்ப்பதென்பதைத் தவிர நேரடியாகப் பார்ப்பதென்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று முகம்மது கருப்பன் பஹ்ரெய்னின் வெளிநாட்டவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு பரிதாபமாகத் தெரிவித்துள்ளார்.

No comments: