கணிதம் மற்றும் மொழிப் பாடங்களில் சிறுவர், சிறுமிகளுக்கு இயற்கையாக உள்ள திறன் அவர்களின் விரல்களின் நீளத்தை கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. பிரிட்டனில் பாத் என்ற நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் உளவியல் துறையில் பணியாற்றுபவர் டாக்டர் மார்க் புரோஸ்நான். இவர், “சைக்காலஜி’ என்ற பத்திரிகையில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஆறு வயது முதல் ஏழு வயது வரை உள்ள 75 சிறுவர், சிறுமியர் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். கை விரல்களின் நீளத்துக்கு ஏற்றவாறு அவர்களின் கணிதம் மற்றும் மொழிப் பாடங்களின் திறமை வெளிப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது. மோதிர விரலை விட நீளம் குறைவாக உள்ள சுட்டு விரலை கொண்ட சிறுவர்கள் கணிதத்தில் திறமையானவர்களாக உள்ளனர். சிறுமிகளில் மோதிர விரல் மற்றும் சுட்டு விரல் ஒரே அளவாக இருந்தால் அவர்கள் மொழிப் பாடங்களில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றனர்.
இவ்விரல்களின் அளவுகள் மாறுபட்டு இருந்தால் தோற்றத்தில் தனித்தன்மை, விளையாட்டுத் திறன், அவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் சிக்கல் ஆகியவை குறித்து அறியவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விரல்களின் அளவுகள் மாறுபட்டு இருந்தால், படிப்பில் படு சுட்டியாக உள்ள தன்மை இயற்கையாகவே அமைந்து விடுகிறது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
தாயின் கர்ப்பபையில் இருக்கும் போதே குழந்தைகளின் விரல்களின் நீளம் முடிவு செய்யப்பட்டு விடுகிறது. இதை டெஸ்டிர டோன் மற்றும் எஸ்ட்ரோஜென் ஆகிய சுரப்பிகள் தான் முடிவு செய்கின்றன. இதில், டெஸ்டிரடோன் சுரப்பிகள் அதிகளவில் செயல்பட்டால், மோதிர விரலை விட சுட்டு விரலின் நீளம் குறைவாக இருக்கும். எஸ்ட்ரோஜென் சுரப்பிகள் அதிகளவில் செயல்பட்டால் இரு விரல்களின் நீளம் ஒரே அளவில் இருக்கும். இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment