Sunday, 1 July 2007

முஸ்லிம் பெண்கள் நீச்சல் பழக பிரிட்டனில் "பர்க்கினி' உடை

லண்டன் : நீச்சல் பழகும் முஸ்லிம் மாணவிகளுக்கு தனி நீச்சல் உடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பெயர் "பர்க்கினி' உடை. பர்தா பிகினி இணைத்து தயாரிக்கப்படும் இந்த உடையை, முஸ்லிம் மாணவிகள் அணிந்து, நீச்சல் பழக அனுமதிக்க வேண்டும், என்று லண்டன் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற மாணவிகள் போல, நீச்சல் உடையை அணிந்து, நீச்சல் பழக முஸ்லிம் பெண்கள் தயாரில்லை. அதனால், நீச்சல் உடை அணிந்தாலும், உடலை முழுக்க மறைக்கும் வகையில், வேறு உடை அணிந்து கொண்டனர். இதை அறிந்த பிரபல நீச்சல் உடை நிறுவனம், முஸ்லிம் மாணவிகள் பயன்படுத்தும் வகையில், பர்தா மற்றும் நீச்சல் உடை இணைந்த டிரஸ்சை தயாரித்து, அதற்கு, "பர்க்கினி' என்று பெயரிட்டது. தலை முதல் கால் வரை உடலை மறைத்து தயாரிக்கப்பட்ட நீச்சல் உடை இது. விலை ரூ. 2,500 . மேற்கு லண்டன் பகுதியில்,சில இடங்களில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகம். அங்குள்ள பள்ளிகளில், நீச்சல் பழகும் முஸ்லிம் மாணவிகள், இந்த புது உடையை அணிந்து, நீச்சல் பழக அனுமதிக்க நகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நீச்சல் உடை கம்பெனிக்கு, "ஆன் லைன்' மூலம், "பர்க்கினி' உடைக்கு ஏகப்பட்ட ஆர்டர்கள் குவிந்துவிட்டன.

No comments: