விவரம் தெரிந்த நாள் முதல் இன்றுவரை எண்ணத்திலும், செயலிலும் எப்போதும் ஒன்றாகவே இருக்கும் இரட்டைப் பிறவி மாணவிகள் சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பாட வாரியாகவும், மொத்தமாகவும் ஒரே மார்க்குகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். விடுமுறைக்காக இப்போது சென்னை வந்து இருக்கும் இவர்களது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம், சாரங்க்பூர். அங்குள்ள ஆஷா மாடர்ன் பள்ளியில் படித்த இவர்கள், பள்ளியிலும், சாரங்க்பூர் மாவட்ட அளவிலும் முதலிடத்தை பிடித்துள்ளனர். இரட்டை பிறவி என்பது புதிதல்ல. பெரும்பாலான இரட்டை பிறவிகளில் ஒருவருக்கும் மற்றொருவருக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கும். ஆனால், உத்தரபிரதேசம் மாநிலம், சாரங்க்பூரில் வசிக்கும் புவன் ஜெயின்-சந்த்னா ஜெயின் தம்பதிக்கு பிறந்த இரட்டை பிறவி பெண் குழந்தைகள் நிறத்திலும், முகத்தோற்றத்திலும், உடல் அமைப்பிலும் அச்சில் வார்த்தார் போல ஒன்று போல இருக்கிறார்கள்.
இதனால், அவர்களது பெற்றோரை தவிர மற்ற யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இரட்டை பிறவி பெண் குழந்தைகளில் மூத்தவர் ரூபாலி ஜெயின் (16), இளையவர் சோனாலி ஜெயின் (16).
இதனால், அவர்களது பெற்றோரை தவிர மற்ற யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இரட்டை பிறவி பெண் குழந்தைகளில் மூத்தவர் ரூபாலி ஜெயின் (16), இளையவர் சோனாலி ஜெயின் (16).
கல்விப்பணியில்
புவன் ஜெயின் குடும்பம் கல்விப்பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபட்டுள்ளது. ஆஷா மாடர்ன் பப்ளிக் ஸ்கூல், ஆஷா மாடர்ன் ஸ்கூல், ஆஷா மாடர்ன் ப்ரீ-நர்சரி, நர்சரி பள்ளி ஆகிய 3 பள்ளிகளை நடத்தி வருகிறார்கள். இந்த பள்ளிகள் சாரங்க்பூரில் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
பிளஸ்-2 வரை உள்ள ஆஷா மாடர்ன் பள்ளியில் தான் இந்த இரட்டையர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் முதல்வராக இவர்களின் தந்தை புவன் ஜெயின் இருக்கிறார். தாய் சந்த்னா ஜெயின், ஆஷா மாடர்ன் பப்ளிக் பள்ளி முதல்வராக இருக்கிறார்.

சாதனை
தந்தையே பள்ளி முதல்வராக இருப்பதால் இரட்டைப்பிறவி பெண் குழந்தைகள் இதுவரை எல்லா வகுப்புகளிலும் ஒரே மார்க்குகள் வாங்குகிறார்களோ என்று சந்தேகம் எழுந்தது. அதை முறியடிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன் வெளியான சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த இரட்டையர்கள் பாட வாரியாகவும், மொத்தமாகவும் ஒரே மார்க்குகள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த அபூர்வ சகோதரிகள் தங்களது தாய், தந்தையுடன் சென்னையில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்துள்ளனர். இரட்டைப்பிறவி சகோதரிகள் பற்றி அவர்களின் தாய் சந்த்னா ஜெயின் நமது நிருபரிடம் கூறியதாவது:-
ஒற்றுமை எங்களது இரட்டைப்பிறவி பெண்கள் பிறப்பிலும் மட்டுமல்ல. அனைத்து எண்ணங்களிலும், செயல்களிலும் எப்போதும் ஒன்றாக இருப்பது எங்களுக்கே வியப்பாக இருக்கிறது. அவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் எடுத்து எங்கள் குடும்பத்தை ஆச்சர்யத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளனர். பெண் குழந்தைகளை வெறுக்கும் இந்த காலத்தில் எங்களது பெண் குழந்தைகள் பெருமை தேடிக்கொடுத்துள்ளனர்.
இரட்டைப்பிறவி பெண்களான ரூபாலி ஜெயினும், சோனாலி ஜெயினும் ஒற்றுமையின் இலக்கணமாக திகழ்கின்றனர். காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை ஒன்றாகவே இருப்பார்கள். காலையில் ஒருத்தி வேகமாக எழுந்துவிட்டால் மற்றவள் எழுந்திருக்கும் வரை படுக்கையிலே காத்திருப்பாள். அதுபோல காலைக் கடன்களை முடித்துவிட்டு டிபன் சாப்பிட இருவரும் ஒன்றாகவே வந்து சாப்பிடுவார்கள். இதுபோலவே மதியம் மற்றும் இரவிலும் சாப்பிடுகிறார்கள்.

விட்டுக் கொடுக்காத தன்மை
பாட்டு, நடனம், ஓவியம் என எந்த பொழுது போக்கானாலும் இவர்களது ஒற்றுமை அங்கே பளிச்சிடும். பெற்றோருடன் சிறிது நேரம் டி.வி. பார்த்துவிட்டு ஒன்றாகவே படுக்கைக்கு போய்விடுவார்கள். எந்த செயலையும் திட்டமிட்டு செய்வது இவர்களது சிறப்பு அம்சம். இவர்களது ஒற்றுமையும், விட்டு கொடுக்கும் மனப்பான்மையும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறது.
கோபத்தில் ஒருத்தியை நான் திட்டிவிட்டால் மற்றவள் விட்டுக் கொடுக்கமாட்டாள். ரூபாலி கண் கலஙëகினால், சோனாலியும் கண் கலங்கி விடுவாள். அனைத்து பழக்க வழக்கங்களிலும் இருவரது குணாதிசயங்களும் ஒன்றுபோல இருப்பது வியப்பிலும் வியப்பு.
முதன்முறையாக மாற்று உடையில்
ஒருபோதும் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். படிப்பதற்கு நேரம் காலம் பார்ப்பதில்லை. சாப்பிடும் போது கூட இருவரும் படித்துக் கொண்டே இருப்பார்கள். இருவரும் ஒரே மாதிரியான டிசைன், நிறம் கொண்ட ஆடைகளை தேர்வு செய்வார்கள். காலில் போடும் செருப்பு முதல் முடி அலங்காரம் வரை என எல்லாம் ஒன்றுபோல இருக்கும்.
கோடை விடுமுறைக்காக சென்னை வந்திருக்கிறார்கள். இங்கு, இருவருக்கும் வெவ்வேறு நிறத்தில் பாட்டி துணி எடுத்துக் கொடுத்துள்ளார். வாழ்க்கையில் இன்று தான் முதல் முறையாக இருவரும் வெவ்வேறு நிற துணியை கட்டியுள்ளனர்.

அற்புத படைப்பு
இருவரும் 8-ம் வகுப்பு படித்தபோது, மொத்த மார்க்குகளில் ரூபாலிக்கு 2 மதிப்பெண்கள் குறைவாக கிடைத்தது. இதனால், சோனாலி தாமாக முன்வந்து தனக்கு இரண்டு மதிப்பெண்களை குறைத்து இருவரின் மார்க்குகளை சமமாக்க வேண்டுëம் என்று ஆசிரியரிடம் கேட்டார். ஆனால், அதற்கு ஆசிரியர் மறுத்துவிட்டார். இரண்டு பேரும் 2 நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இவர்களின் ஒழுக்கமும், நேரம் தவறாமையும் கருத்தில் கொண்டு சோனாலியின் கோரிக்கை ஏற்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்காலத்தில் வணிகவியல் பாடம் படிக்க வேண்டும் என்ற லட்சியத்திலும் ஒன்றாகவே இருக்கிறார்கள் இந்த இரட்டைப்பிறவி மாணவிகள். ஆண்டவனின் படைப்பில் எத்தனையோ அற்புதங்கள் உள்ளன. இந்த இரட்டைப்பிறவி குழந்தைகளின் எண்ணத்திலும், செயல்பாட்டிலும் அந்த அற்புதத்தை காண முடிகிறது.

No comments:
Post a Comment