Monday, 25 June 2007
மது குடிக்க வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டவருக்கு 'குவார்ட்டர்' அஞ்சலி!!!
கரூர் மாவட்டம் ராயனூர் என்ற கிராமத்தில், குடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டவருக்கு அவரது நண்பர்களும்,உறவினர்களும் குவார்ட்டர் பாட்டில் மது வாங்கி வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். ராயனூரைச் சேர்ந்தவர் சுப்ரமணியம். கூலி வேலை செய்து வந்தார். அவரது மனைவி சந்திரகாந்தி. நேற்று மாலை குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார் சுப்ரமணியம். ஆனால் சந்திரகாந்தி பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. குடிக்கப் பணம் தர மறுத்து விட்டாளே மனைவி என்று வருத்தமடைந்த சுப்ரமணியம், வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் பரவியதும் சுப்ரமணியத்தின் உறவினர்கள் நூற்றுக்கணக்கில், சுப்ரமணியம் வீட்டுக்கு வந்தனர். சுப்ரமணியத்திற்கு மிகவும் விருப்பமான மது பாட்டில்களை (எல்லாம் குவார்ட்டர் பாட்டில்கள்) வாங்கிக் கொண்டு வந்து சுப்ரமணியத்திறகு இறுதி அஞ்சலி செலுத்தினர். உடலை சிதையில் வைத்தபோது குவார்ட்டர் பாட்டிலகளை உடைத்து மதுவை உடல் மீது ஊற்றி 'தண்ணீர்' மல்க அஞ்சலி செலுத்திய காட்சி படு விநோதமாக இருந்தது. ஒரு குவார்ட்டர் பாட்டில் கிடைக்காத காரணத்தால்தான் சுப்ரமணியம், தற்கொலையே செய்து கொண்டார். ஆனால் அவர் இறந்த பின்னர் நூற்றுக்கணக்கான குவார்ட்டர் பாட்டில்களைக் கொண்டு வந்து அவரது நிறைவேறாத ஆசையை நிறைவேற்றி வைத்து விட்டனர் உறவினர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment