புதுடில்லி : ஊசிமருந்து போட்டுக்கொள்ளும் தொல்லையில் இருந்து விடுபட, சர்க்கரை நோயாளிகளுக்கு, இன்சுலின் மாத்திரை விரைவில் கிடைக்கப்போகிறது.
பிரிட்டன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், இது தொடர் பாக ஆய்வு செய்து, மாத்திரை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். மாத்திரையை சில சர்க்கரை நோயாளிகளுக்கு அளித்து, பரிசோதனை செய்து வெற்றியும் கண்டுள்ளனர். டில்லியில் பிரபல, "போர்ட்டீஸ்' மருத்துவமனை டாக்டர் அனுப் மிஸ்ரா கூறியதாவது:ஊசி மருந்து மூலம் இன்சுலின் செலுத்திக் கொள்வதில், நோயாளிகளுக்கு சிரமம் இருக்கிறது. அவர்களுக்கு மாத்திரை வடிவில் இன்சுலின் கிடைப்பதால், முழு பலன் விரைவாகவும் கிடைக்கும். மாத்திரையை சாப்பிட்டவுடன், வயிற்றில் போய் கரைந்து, இன்சுலின் சத்துக்களை உடல் ஏற்றுக்கொள்கிறது. உடனே பலன் கிடைக்கிறது. தினமும் ஊசி போடுவோருக்கு இன்சுலின் மாத்திரை மிகுந்த ஆறுதலை தரும். இவ்வாறு மிஸ்ரா கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment