பிரிட்டிஷ் பிரதமராக இருந்து ஆடம்பரக் காரில் பவனி வந்த ரொனிபிளயர், பதவி விலகியதும் சாதாரண பயணிபோல மனைவியுடன் ரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் சக பயணிகளுடன் சரிசமமாக உட்கார்ந்து பயணம் செய்தார். ரொனிபிளயர் நீண்டகாலம் பிரதமராக இருந்து தான் சார்ந்திருக்கும் கட்சியின் செல்வாக்கு, ஈராக்போர் காரணமாக சரிவதால் அதைத் தடுத்து நிறுத்துவதற்காக அவர் பதவி விலகினார். இராஜிநாமா கடிதத்தை அவர் மனைவியுடன் பக்கிங்காம் அரண்மனைக்கு சென்று மகாராணி எலிசபெத்திடம் கொடுத்தார். அப்போது அவர் பிரதமர் என்ற முறையில் அரசாங்க காரில் சென்றார். பதவி விலகல் கடிதத்தை கொடுத்து விட்டு வெளியே வந்ததும் பிரதமருக்கு உரிய காரை அங்கேயே விட்டு விட்டு அவர் சாதாரண காரில் ஏறி, ரயில் நிலையம் சென்றார். கிங்ஸ்கிராஸ் ரயில் நிலையத்தில் அவரை பார்த்ததும் பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். சாதாரண குடிமக்கள் போல அவர் ரயில் நிலையத்தில் அங்கும் இங்கும் மனைவியுடன் சென்று வந்தார்.அவரை பார்த்த பயணிகள் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். சிலர் அவருக்கு கை கொடுத்தனர்.
அதன் பிறகு அவர் தன் சொந்த ஊரான செட்ஜ் பீல்டுக்கு செல்வதற்காக டான்காஸ்டர் என்ற நகருக்கு ரயிலில் சென்றார். அவர் சக பயணிகளுடன் சமமாக உட்கார்ந்து சென்றார். அங்கு அவர் போய் சேர்ந்ததும் அவர்களை அழைத்துச் செல்வதற்காக இருந்த கார் வந்து சேரவில்லை. அதனால் அவர்கள் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
பிறகு தான் அவர்கள் சொந்த ஊரை போய்ச் சேர்ந்தனர். அதன் பிறகு தான் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்வதாக அறிவித்தார். பாலஸ்தீன பிரச்சினையில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஐ.நா. தூதராக பிளயர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment