Monday, 25 June 2007

இமயமலையில் “வயாக்ரா” தேடும் நேபாள மக்கள்


“தாம்பத்திய சக்தி” தரும் மூலிகைச் செடியைத்தேடி நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் அந்நாட்டு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இது குறித்து நேபாளத்தில் இருந்து வெளியாகும் “கூர்காபத்ரா” என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. “நேபாள வயாக்ரா” என்றழைக்கப்டும் இந்த மூலிகை, உலகின் பல நாடுகளில் மிகப்பிரபலம். நேபாளத்தில் இதற்குப் பெயர் “யார்ச்ககும்பா”. இது 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவரை விலைபோகும் என்பதால் சர்வதேச சந்தையில் இந்த மூலிகைக்கு கடும் கிராக்கி இருக்கிறது. நேபாளத்தின் முகு மாவட்டத்திலுள்ள கரண்பேக் பகுதியில் “யார்ச்சகும்பா” செடிகள் அதிகளவில் கிடைக்கும் என்பதால் அண்மையில் அப்பகுதியை நோக்கி 10 ஆயிரம் பேர் சென்றனர். மிக மோசமான வானிலை, அதிக உயரத்தின் காரணமாக ஏற்படும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. தாம்பத்திய சக்தி தரும் இந்த மூலிகையைக் கொண்டுவர பெண்களும், குழந்தைகளும் செல்வதுதான் இதில் சுவாரஸ்யமான விஷயம். கடந்த வாரம் மூலிகையைக் கொண்டுவரச் சென்ற 16 பேர் பலியானார்கள். இவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடக்கம் என்பது வருத்தத்துக்குரிய செய்தி. அவர்கள் தங்குவதற்காக அமைத்திருந்த கூடாரத்தை பனிக்கட்டிகள் மூடியதால் இந்தத் துயரச் சம்பவம் நேர்ந்ததாக கூறப்படுகிறது.

No comments: