Monday, 25 June 2007

ஆப்பிள் பழத்திலிருந்து எரிபொருள் தயாரிப்பு

காட்டாமணக்கு போன்ற தாவரங்களிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் முறை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு அது செயற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழக நிபுணர்கள் ஓரஞ்சுப்பழம், ஆப்பிள்பழம் போன்றவற்றிலிருந்து உயிரியல் எரிபொருள் தயாரித்து சாதனை படைத்துள்ளனர். இந்தப் பழங்களில் ~பிரக்டோஸ் என்ற சக்கரைச் சத்துள்ளது. இந்த சக்கரைச் சத்தைப் அமெரிக்க நிபுணர்கள் எரிபொருளாக மாற்றியுள்ளனர். ஈத்தனாலை விட அதிக சக்தி கொண்ட எரிபொருளாக இது உள்ளது. இந்த எரிபொருளைக் கொண்டு கார்களை ஓட்டிக்காட்டி சாதனையும் நடத்தியுள்ளனர். இதிலிருந்து அதிகளவு காபன் புகை வெளிவருவதில்லை. ஏற்கனவே இங்கிலாந்து விஞ்ஞானிகள் கழிவுப்பொருட்கள், பிளாஷ்;டிக் பைகள் ஆகியவற்றில் இருந்து உயிரியல் எரிபொருள் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: