Saturday, 3 February 2007

வாலிபர் ஒருவர் தனது மேலதிகாரியிடம் சென்று ஒருநாள் விடுமுறை வேண்டும் என்று கேட்டார்.மேலதிகாரி, வேலை அதிகம் இருப்பதால் விடுமுறை கொடுக்க முடியாது என்று கூறினார்.வாலிபர், விடாப்பிடியாக வீட்டில் நிறைய வேலை இருக்கிறது. எனவே கட்டாயம் விடுமுறை வேண்டும் என்றார்.மேலதிகாரி கோபமாக விடுமுறை கொடுக்க முடியாது என்றால், கொடுக்க முடியாதுதான் என்றார்.அப்போதும் வாலிபர், அவரது அறையிலேயே நின்று கொண்டு இருந்தார். மேலதிகாரி, கோபமாக இன்னும் என்ன வேண்டும் என்று கேட்க, வாலிபர், எனது மனைவி உங்களிடம் போன் செய்து பேசினாலும் தயவு செய்து இதே பதிலைக் கூறுங்கள் என்றார்.

No comments: