கொலைகள் செய்யவில்லைசாமியார் மறுப்பு
பிப்ரவரி 03, 2007
சென்னை: சென்னை அருகே உள்ள சோழவரத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ள ராமகிருஷ்ண ஆத்மாலய ஆசிரமத்தில் இன்று வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சோழவரம்கம்மார்பாளையம் சாலையில், ராமகிருஷ்ண ஆத்மாலய ஆசிரமம் உள்ளது. கிட்டத்தட்ட 21 வருடங்களாக இயங்கி வரும் இந்த ஆசிரமத்தை சுவாமி அமுதானந்த தவயோகி நிர்வகித்து வருகிறார்.
இந்த ஆசிரமத்திற்குள் 4 பெண்கள் உள்பட 10 பேர் மர்மமாக இறந்துள்ளதாகவும், அவர்கள் ஆசிரமத்திலேயே புதைக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக சோழவரம் பஞ்சாயத்துத் தலைவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த ஆசிரமத்தில் முதியோர் இல்லம், ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஆகியவை உள்ளன. மொத்தம் 225 பேர் தங்கியுள்ளனர். இங்கு அடிக்கடி காளி பூஜை நடத்தப்படும். இதில் கலந்து கொண்டால் நோய் தீரும் என்ற நம்பிக்கை இப்பகுதியினருக்கு இருப்பதால் அதிக அளவில் மக்கள் வருவது வழக்கம்.
பூஜைகள் நடத்தும்போது ஆசிரமத்தைச் சேர்ந்த இளம் பெண்களை மட்டும் அருகில் வைத்துக் கொள்வார் சாமியார் என்றும், அவர்கள் பாலியல்ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் புகார் கூறப்பட்டது.
அந்தப் பெண்கள் பாலியல் நோய்கள் தாக்கி அவர்கள் இறந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என சோழவரம் பஞ்சாயத்துத் தலைவர் போலீஸில் கொடுத்துள்ள புகாரில் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து திருவள்ளூர் எஸ்.பி. பழனிச்சாமி தலைமையில் போலீஸார் நேற்று அதிரடி விசாரணை நடத்தினர். மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடந்தது.
இதில், 6 பேர் இயற்கையான நோயாலும், 4 பேர் வயோதிகம் காரணமாகவும் இறந்ததாக சாமியார் கூறியுள்ளார். அவர்களின் உடல்களை உறவினர்கள் முன்னிலையில்தான் புதைத்தோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் இன்று பொன்னேரி டிஆர்ஓ சங்கீதா ஆசிரமத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். சாமியாரிடமும், அங்கு தங்கியுள்ளவர்களிடமும், இளம் பெண்களிடமும் அவர் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையின்போது, தான் யாரையும் கொன்று புதைக்கவில்லை என்று சாமியார் மறுத்துள்ளார்.
தகவல்
Saturday, 3 February 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment