Tuesday, 5 December 2006

Srilanka

பொருள்கள் வாங்க வரிசையில் நிற்போரின்
சைக்கிள்களை அபேஸ் செய்யும் திருடர்

உணவுப்பொருள்களைப் பெறு வதற்காக அதிகாலை முதலே விற் பனை நிலையங்களின் முன் கூடும் மக் கள் தமது சைக்கிள்களைப் பறிகொடுக் கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின் றன.

சைக்கிள்களில் வருபவர்கள் கடை களின் முன்பாக வண்டிகளை நிறுத்த முடியாத நிலையில் கடைகளுக்குச் சிறிது தூரம் தள்ளியே நிறுத்துகின்றனர். நம்பர்களை வாங்குவதிலும் பொருள் களைப் பெறுவதிலும் மக்கள் அக்கறை செலுத்திக்கொண்டிருக்கும் சமயம் பூட்டி யுள்ள சைக்கிள்களைக் கூட மாற்றுத் திறப்புப் போட்டு திருடர்கள் அபகரித்துச் சென்றுவிடுகின்றனர்.

கடந்த வாரத்தில் மட்டும் நல்லூர் கைலாசபிள்ளையார் கோயிலடி மற் றும் யாழ்.கிளை இல. 12 ஆகிய ப. நோ.கூ. ச கடைகள் அருகில் ஆறு சைக் கிள்வண்டிகள் களவு போயுள்ளதாகக் கூறப்படுகின்றது.

உதயன்

No comments: