Tuesday, 5 December 2006

Srilanka

இலங்கையில் இந்தியத் தலையீடுதான்
சமாதானத்தைக் கொண்டுவர முடியும்!

"வாழும் கலை' நிறுவுநர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவிப்பு

""புரையோடிப் போயிருக்கும் இலங் கையின் இனப்பிரச்சினையில் இந்தியா வின் தலையீடு அவசியம். அப்பொழுது தான் அந்த நாட்டில் தீர்வையும், சமாதா னத்தையும் கொண்டுவர முடியும்'' என்று "வாழும் கலை' நிறுவனத்தின் ஸ்தாபக ரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

"ஆத்மானந்த உற்சவம் 2006' என்ற வைபவம் கடந்த ஞாயிறு இரவு பொள் ளாச்சியில் நடந்தது. இங்கு சமுகமளித் திருந்த அடியார்கள் மத்தியில் ஆன்மீகத் தந்தையான ரவிசங்கர் உரையாற்றினார்.

அவர் கூறியதாவது:
""இலங்கை மக்கள் பல்வேறு இன் னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். போதிய உணவு வசதி, மருத் துவ வசதி, போக்குவரத்து வசதி எதுவும் இல்லாமல் அவர் கள் அவலப்பட்டுக் கொண் டிருக்கிறார்கள். இந் தத் துயரங்களுக்கு எல்லாம் முடிவு கட்டு வதற்கு இந்தியா உடனடியாகத் தலையிட்டு, அங்கு சமாதானத்தை நிலைநாட்ட முன்வர வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் தலையிட்டு ஒரு சுமுகமான தீர்வைக் கண்டறிவதற்கு இந்திய அரசு மறுத்து, ஒதுங்கி இருப்பது ஏன் என்பது எனக்கு விளங்கவில்லை.
இந்தியாவின் தலையீட்டை எதிர்பார்த் துக் கொண்டு இலங்கை அரசும் இருக்கிறது. விடுதலைப் புலிகளும் இருக்கிறார்கள். எனவே, இந்தியா தலையிட்டு தீர்வுக் கான தனது பங்களிப்பைப் பெரிதாகச் செய்யவேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ இந்தியா ஏன் இன்னும் முன்வரவில்லை?
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கார்கில் யுத்தத்தில் 2,000 இந்தியப் படையினரின் மரணத்துக்கு அன்று பொறுப்பாக இருந்த பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்புக்கு இன்று செங்கம்பளம் விரித்து இந்திய அரசு வர வேற்புக் கொடுக்கிறது. இந்த நிலையில் இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா ஏன் தயங்க வேண்டும்?

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா பெருந் தொகை நிதி உதவிகளைச் செய்துள்ளது. இந்தியன் ஒருவன் அங்கு சிரச்சேதம் செய் யப்பட்டிருந்தாலும் இந்தியா உதவுகிறது. பூகம்பத்தால் சேதமடைந்த பகுதிகளைக் கட்டியெழுப்பப் பாகிஸ்தானுக்கு 180 கோடி ரூபாவை இந்தியா வழங்கியிருக்கி றது. இது போன்ற உதவிகளை இலங்கை யில் அவதிப்படும் தமிழ் மக்களுக்கு இந்தியா ஏன் இன்னமும் வழங்க முன்வர வில்லை?

இலங்கையில் அல்லல்படும் ஆயிரக் கணக்கான மக்களுக்கு இந்திய அரசு உடன டியாகத் தலையிட்டு உதவ வேண்டும்.''
இவ்வாறு சுவாமி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.

உதயன்

No comments: