Thursday, 7 December 2006

பயங்கரவாத தடைச்சட்டம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் வலுவான புதிய விதிகளுடன் அமுலுக்கு வந்தது

சமாதானப் பேச்சு முயற்சிகளைபாதிக்காது என்கிறது அரசு
மக்கள் பாதிக்கப்பட்டால் மேன்முறையீடு செய்ய வசதி


கொழும்பு, டிசெம்பர் 7

பாதுகாப்புப் படையினருக்கும், பொலிஸாருக்கும் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் "பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்' (Prevention of Terrorism Act) இலங்கைத் தீவு முழுவதும் நேற்று முதல் மீண்டும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
கைது செய்வதற்கும், தடுத்து வைப்பதற்கும், சிறையில் அடைப்பதற்கும் பாதுகாப்புப் படையினருக்கு விசேட அதிகாரங்களை வழங்கும் இந்தச் சட்டம் புதிய பல துணை விதிகள் சேர்க்கப்பட்டு உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் அமுலுக்கு வந்திருப்பதாகப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார்.

2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை நடைமுறைக்கு வரும்வரை அமுலில் இருந்த இந்தச் சட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் பல புதிய துணை விதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் புதிய நடவடிக்கையால் சமா தான முயற்சிகள் பாதிக்கப்படாது. அது இன்னும் வலுப் பெறவே செய்யும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்து டன், இந்தச் சட்டத்தால் பொது மக்கள் பாதிக்கப்பட நேரின் அது குறித்து முறைப்பாடு செய்ய வசதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பயங்கரவாத நடவடிக்கை களைக் கட் டுப்படுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதிய ஒழுங்கு விதி கள் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்றும், அவை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன என்றும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடக வியலாளர் மாநாட்டில் கூறினார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைச்சரவையின் அனுமதியுடன் இந்தத் துணை விதிகள் சேர்க்கப்பட் டுள்ளன என்றும் இந்தப் புதிய நடவடிக்கையால் அமைதி முயற்சிகள் பாதிக்கப்படாது என்றும் இத்துணை விதிகளின் பிரகாரம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் துணைபுரிவோருக்கு 10 வருடங்களுக்குக் குறையாத, 20 வருடங்களுக்கு மேற் படாத சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:
""பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி அமைதி முயற் சிகளை முன்னெடுப்பதற்குக் காலத் திற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன. அதன்படி பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பலப்படுத்தப்படல் வேண்டும்.

தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் வலுவின்றிக் காணப்படுகின்றது. அதை வலுப்படுத்தும் நோக்கில் மேலும் சில துணை விதிகளை அதனுடன் இணைக்க அமைச் சரவை அனுமதி வழங்கி இப்போது அந்தத் துணை விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இத்துணை விதிகள் இன்று முதல் (புதன்கிழமை) வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வருகின்றது. இத்துணை விதிகளின்படி பயங்கரவாதத்திற்கு ஆதரவாகச் செயற்படுதல், பயங்கரவாதிகளின் சீருடைகளை அணிதல், அவர்களின் இலச்சினையைக் கொண்டிருத்தல், பயங்கரவாதிகளின் சார்பில் நிதி திரட்டுதல், தகவல் கொடுத்தல் மற்றும் வேறு வழிகளில் உதவுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 10 வருடங்களுக்குக் குறையாத, 20 வருடங்களுக்கு மேற்படாத சிறைத் தண்டனை வழங்கப்படும்.

அமைதி முயற்சி பலப்படும்

இப்புதிய ஏற்பாட்டின் மூலம் அமைதி முயற்சி ஒருபோதும் பாதிக் கப்படாது. அமைதி முயற்சியை மேலும் பலப்படுத்தவும், பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவுமே இத்துணை விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன'' என்றார்.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில்
""இந்தப் புதிய ஏற்பாடானது அமைதி முயற்சியை மாத்திரமின்றி வடக்கு கிழக்கின் அபிவிருத்தியையும் பாதிக்காது. புலிகள் எந்நேரமும் பேச்சுக்கு வரலாம். இப்புதிய ஏற்பாடு ஒருபோதும் அமைதிப் பேச்சைப் பாதிக்காது.

""இந்தப் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் காலப் பகுதியில் பொது மக் கள் பாதிக்கப்பட்டால் அது தொடர்பான விசாரணை நடத்தவும், அவர்களுக்கு உரிய நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென மேன்முறையீட்டுச் சபை ஒன்று உரு வாக்கப்பட்டுள்ளது.'' என்று தெரிவித்தார்.


உதயன்

No comments: