Thursday, 7 December 2006

அன்ரன் பாலசிங்கம்

அன்ரன் பாலசிங்கத்தின் முன்னாள் பெயர் எஸ்.பி. ஸ்ரனிஸ்லொஸ்

[07 - December - 2006]

இந்த நாட்டில் பயங்கரவாதத்துடன் மிகவும் நெருங்கிய பிரபலமான பெயர் தான் அன்ரன் பாலசிங்கம் என்பது. அரசாங்கத்திற்கும் புலிகள் அமைப்புக்குமிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் இயக்கத்தின் அரசியல் நியாயவாதி என்ற பெயரில் அறிமுகமான அன்ரன் பாலசிங்கம் தற்போது சுமார் 43 வருடங்களுக்கு முன் ஸ்ரீ லங்காவிலிருந்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஆங்கில, தமிழ் மொழி பெயர்ப்பாளராக சேர்ந்து பணி புரிந்தவர். அப்பொழுது இவருடைய பெயர் எஸ்.பி.ஸ்ரனிஸ்லொஸ் என்பதாகும். பிற்காலத்தில் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று இவர் இங்கிலாந்தில் குடியேறிய பின்னரே எஸ்.பி.ஸ்ரனிஸ்லொஸ் என்ற தனது சொந்தப் பெயரை அன்ரன் பாலசிங்கம் என மாற்றியமைத்துக் கொண்டு புலிகள் இயக்கத்தின் நியாயவாதியாக எவ்வாறு மாறினார் என்பது பற்றி எவரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
முன்னர் இவ்வாறு எஸ்.பி. ஸ்ரனிஸ்லொஸ் என அழைக்கப்பட்ட இவரிடமுள்ள நல்ல ஆங்கில அறிவும், ஆங்கிலத்தில் சிறந்த முறையில் கருத்துப் பரிமாறல்களைச் செய்யும் திறமையும் காரணமாகவே இவருக்கு புலிகள் இயக்கத்தின் அரசியல் நியாயவாதி என்ற பதவி கிடைத்தது. புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு ஆங்கில அறிவு கிடையாது. இந்த நிலையில் தான் இந்த ஸ்ரனிஸ்லொஸ் எனப்படும் நபரை யாரோ பிரபாகரனுக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். இவ்வாறு வன்னிக் காட்டுக்குள் வசிக்கும் பிரபாகரனுக்கு இங்கிலாந்தில் வசித்து வந்த ஸ்ரனிஸ்லொஸ் எனப்படும் இந்த நபரை பிரபாகரனுடன் தொடர்புடைய யாரோ இடைத் தரகர்தான் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும் என்பதை எவரும் இலகுவில் ஊகிக்க முடியும்.

பிரித்தானிய தூதரகம் கொள்ளுப்பிட்டிக்கு 1963 ஆம் ஆண்டில் மாற்றப்பட்ட பின்னரே எஸ்.பி. ஸ்ரனிஸ்லொஸ் என்னும் பெயரில் ஆங்கில தமிழ் மொழி பெயர்ப்பாளராக இந்த அன்ரன் பாலசிங்கம் நியமிக்கப்பட்டார். இவர் வீரகேசரி செய்திப் பத்திரிகையின் செயலகத்திலிருந்து தான் இவ்வாறு பிரிட்டிஷ் தூதரக சேவையில் சேர்ந்துள்ளார். பின்னர் 1972 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் வசிப்பதற்காக சென்றார். இதன் பின்னர் இவர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டது பற்றி விபரங்கள் இவருக்கும் பிரபாகரனுக்கும் மட்டும் தான் தெரியும்.

அன்ரன் பாலசிங்கத்துடன் முன்னர் பிரித்தானிய தூதரகத்தில் ஒன்றாகப் பணியாற்றியவரான மர்வின் சேனாரத்ன லங்காதீப சார்பில் தெரிவித்துள்ள விபரங்களிலிருந்து மேற்படி குறிப்புகள் எடுக்கப்பட்டன.

-லங்காதீப: 03.12.2006-

தினக்குரல்

No comments: