Thursday, 7 December 2006

உண்ணாவிரதம்

கருணாநிதி மகளின் உண்ணாவிரதத்தின் போது கடத்தப்பட்ட வெடிபொருட்கள்

[07 - December - 2006]

தமிழ்நாடு தலைநகர் சென்னையிலுள்ள வள்ளுவர் கோட்டம் மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் மகள் ஷ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். அந்த உண்ணாவிரத நிகழ்வின்போது ஒரு இனத்தின் விடுதலைக்காக அரசியற் கட்சிகள் மட்டும்தான் போராடவேண்டும் என்று நினைக்கவேண்டாம். இலக்கியவாதிகளின் பரந்த சேவையையும் அதற்காகச் செய்யப்படவேண்டும். நீண்டகாலமாக இலங்கையில் தமிழ் மக்கள் இன்னலுக்குள்ளாகி வருவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாம் ஒன்றுசேர்ந்து எமது மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதியின் மகள் அறிவித்திருந்தார்.
இவ்வாறு அவர் பிரபாகரனுக்காக உண்ணாவிரதம் இருந்த வேளையில் மதுரைப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஒரு வாகன விபத்து மூலம் மிகவும் முக்கியமான சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த விபத்தின் மூலம் தமிழ் நாட்டிலிருந்து ஷ்ரீலங்காவுக்கு வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

மதுரை நகரிலிருந்து 40 கிலோமீற்றர் தூரத்திலுள்ள மானாமதுரை பிரதேசத்தில் கடந்த 29 ஆம் திகதி புதன்கிழமை இரவு லொறி ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்தே மேற்படி வெடிபொருட்கள் ஷ்ரீலங்காவுக்குக் கடத்தப்பட்ட தகவலை மதுரைப் பொலிஸ் தரப்பினர் அறிந்துகொண்டனர். குறித்த லொறி பிரேக் தொழிற்படாத காரணத்தாலேயே அது விபத்துக்குள்ளாகியிருந்தது. மதுரைப் பொலிஸ் தரப்பினர் அந்த லொறியைச் சோதனையிட்டபோது அதற்குள் சுமார் 1,500 கிலோகிராம் நிறையான வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்தனர். தடித்த பொலித்தீன் பைகளுக்குள் இடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தப் பெருந்தொகையான வெடிபொருட்கள் பற்றிய விசாரணையை மதுரைப் பொலிஸார் மேற்கொண்டபொழுதே அவை ஷ்ரீலங்காவுக்காக கடத்திச் செல்லப்படுவதற்காக அவ்வாறு லொறியில் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது. தொடர்ந்து அந்த லொறியின் சாரதியாகிய விஜயகுமார் என்பவரை மதுரைப் பொலிஸ் தரப்பு கைது செய்தது. ஆயினும் மொஹிதீன் எனப்படும் லொறிச் சாரதியின் உதவியாளர் லொறி விபத்துக்குள்ளான பின்னர் தப்பியோடிவிட்டார்.

இவ்வாறு தமிழ் நாட்டிலிருந்து மன்னார் கல்பிட்டி கடல் மார்க்கமாக புலிகள் இயக்கத்தினர் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் பலதடவைகள் கடத்தி வந்ததை சிறிலங்கா கடற்படையினரும் முன்னர் உறுதிசெய்திருந்தனர்.

-லங்காதீப விமர்சனம்: 03.12.2006-


தினக்குரல்

No comments: