Monday, 11 December 2006
திருட்டு
வாலிபர் ஒருவர் சில்லறைத் திருட்டுக்களில் ஈடுபட்டு அடிக்கடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு வந்தார். ஒவ்வொரு முறையும் அவருக்கு சில மாத சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். மீண்டும் ஒரு முறைஅவர் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது, நீதிபதி அவரைப்பற்றி விசாரித்தார். அவர் படித்த வாலிபர் என்பதை அறிந்து கொண்ட நீதிபதி, இனி நான் உன்னை குற்றவாளி கூண்டில் பார்க்கக்கூடாது என்று கூறினார். உடனே அந்த வாலிபர், அதை என்னிடம் கூறாதீர்கள். சின்ன திருட்டில் ஈடுபட்டால் கூட இங்கே கொண்டு வந்து விடும் காவலர்களிடம் கூறுங்கள் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment