புலிகள் பொது மக்களைக் கேடயமாக பயன்படுத்துவதாக அரசு குற்றச்சாட்டு.
மட்டக்களப்பு, வாகரையில் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி படை யினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் களைத் தொடுக்கின்றனர் என்று படையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆனால், தாம் பொதுமக்கள் இலக்கு களை நோக்கி தாக்குதல்களை நடத்துவதை இயன்றளவு தவிர்த்து வருவதாகவும் அரசின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடி யர் பிரசாத் சமரசிங்க கூறினார்.
எனினும் தமது பாதுகாப்பின் நிமித்தம், எந்த இடத்திலிருந்து தாக்குதல் நடத்தப்படுகிறதோ அந்த இடங்களை நோக்கித் தாங் கள் தாக்குதல் நடத்துவதை தவிர்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.
நேற்று முற்பகல் மட்டக்களப்பு வாகரை நோக்கி படையினர்நடத்திய பல்குழல் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 40 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்றும் வெளியான தகவல்கள் குறித்துக் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வம்மிவெட்டுவான், பால்சேனைப் பகுதியில் அமைந்துள்ள இடம்பெயர்ந் தோர் தங்கியிருந்த நலன்புரி நிலையங்களில் வீழந்து வெடித்த ஷெல்களால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
உதயன்
Monday, 11 December 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment