மனைவி மீது பிரசாந்த் சரமாரி புகார்
மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி நடிகர் பிரசாந்த் தாக்கல் செய்த வழக்கில் பிரசாந்த்தும், அவரது மனைவி கிரகலட்சுமியும் குடும்ப நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
சில நாட்களுக்கு முன்பு பிரசாந்த் குடும்ப நில நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், பிரசாந்த் கூறியிருந்ததாவது:
எனக்கும் தி.நகர் தெற்கு போக் ரோட்டில் உள்ள தொழிலதிபர் தனசேகரனின் மகள் கிரஹலட்சுமிக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு ஆண் குழந்தையும் உள்ளது.
திருமணத்துக்கு முன்பே என்னைப் பற்றி கிரஹலட்சுமியிடம் கூறியிருந்தேன். சினிமா நடிகன் என்பதால் பல தோற்றங்களில் இருக்க வேண்டிய நிலை வரும், பல வதந்திகள் வரும். அதையெல்லாம் பெரிது பண்ணக் கூடாது என்று நான் கூறியதையெல்லாம் ஒப்புக் கொண்டு தான் திருமணத்துக்கு சம்மதித்தார்.
திருமணத்தின்போது கிரஹலட்சுமிக்கு தங்க, வைர நகைகள், பட்டுப் புடவைகளை பரிசாக தந்தோம். ஆனால், அதில் அவர் திருப்தி அடையவில்லை. திருமணம் முடிந்த 2 வாரங்களிலேயே எங்கோ வெளியில் போய்விட்டு தாமதமாக வீட்டுக்கு வந்தார்.
பின்னர் மலேசியாவுக்குப போக வேண்டும், அங்குள்ள கோட்டுமலை பிள்ளையார் கோவிலில் நேர்த்திக் கடன் செலுத்த வேண்டும் என்றார். இதையடுத்து எனது படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டு மலேசியாவுக்கு அவரை அழைத்துச் சென்றேன்.
ஆனால், அங்கு போன பின்னர் தான் அவர் நேர்த்திக் கடன் செலுத்தச் செல்லவில்லை. தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரைப் பார்க்க சென்றார் என்று தெரியவந்தது.
இதன் பிறகு சென்னையில் கிரஹலட்சுமியின் வீட்டுக்கு நான் சென்றபோது என்னை அவரது குடும்பத்தினர் மது அருந்தச் சொல்லி வற்புறுத்தினர்.
பின்னர் கிரஹலட்சுமி நுங்கம்பாக்கத்தில் உள்ள எனது வீட்டிருந்து தனது தந்தையின் வீட்டுக்குப் போகும்போதெல்லாம் ஒரு பை நிறைய பொருட்களை எடுத்துச் செல்ல ஆரம்பித்தார். தனது பொருட்களை எல்லாம் தனது பெற்றோர் வீட்டுக்குக் கொண்டு சென்ற அவரிடம் நான் ஏன் என்று கேட்டபோது, தாய் வீட்டுக்கே செல்லப் போகிறேன் என்றார். நான் அவரை சமாதானப்படுத்தினேன்.
2005ம் ஆண்டு டிசம்பரில் அவருக்கு வாந்தி ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று சோதித்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது கர்ப்பப் பைக்குக் கீழே கட்டி வந்திருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
இந் நிலையில் டிசம்பர் 13ம் தேதி எனது குருவான ராஜன் என்பவரை கிரஹலட்சுமியின் தந்தை மிரட்டினார். அதற்கு எங்களுக்கு காரணமே புரியவில்லை. இந்த ஆண்டு ஜனவரி மாதம் கிரஹலட்சுமி தனது தாய் வீடு சென்றார்.
இதன் பின்னர் என் மீது வரதட்சணை புகார் தரப் போவதாக மிரட்டினார்கள். அதுவும் ஏன் என்று தெரியவில்லை. கிரஹலட்சுமியின் நடவடிக்கை எனக்கு இதுவரை விளங்கவே இல்லை.
கடந்த ஜூலை மாதம் கிரஹலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது, குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடந்தது. ஆனால், எதையுமே என்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டன்.
சினிமாவில் கிடைத்த புகழை மண்ணாக்கக் கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தேன். ஆனால், என்னால் என் மகனைக் கூட பார்க்க முடியவில்லை. என் தாம்பத்ய உரிமையைக் கூட இழந்துவிட்டேன்.
எனக்கும் என் பெற்றோருக்கும் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஏதாவது நேர்ந்தால் கிரஹலட்சுமியின் குடும்பத்தினர் தான் காரணமாக இருப்பார்கள்.
என்னையும் கிரஹலட்சுமியையும் சேர்த்து வைக்க மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் மருமகள் துளசி உள்ளிட்ட பல பெரியவர்களும் பேச்சு நடத்திப் பார்த்தனர். ஆனால், கிரஹலட்சுமி எதற்கும் தயாராக இல்லை.
எனவே என் தாம்பத்ய உறவை நிலை நிறுத்தும் வகையில் என்னையும் கிரஹலட்சுமியையும் குழந்தையையும் சேர்த்து வைத்து, இணைந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரசாந்த் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதன்படி வழக்கு விசாரணைக்கு வந்தபோது கிரகலட்சுமி மட்டும் நேரில் ஆஜரானார். பிரசாந்த் மனுவை விசாரிக்கும் நீதிபதி வராததால், முதன்மை கூடுதல் நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து அங்கு கிரகலட்சுமி ஆஜரானார். நீதிமன்றத்துக்கு பிரசாந்தும் வந்தார். ஆனால், நிருபர்களையும் போட்டோகிராபர்களையும் பார்த்த பிரசாந்த் நீதிமன்றத்தின் பின் பக்கம் நோக்கி ஓடினார்.
வழக்கறிஞரின் பின்னால் மறைந்து கொண்டு ஓடி பின் பக்க வழியாக நீதிமன்றத்துக்கு நுழைந்த பிரசாந்த் நீதிபதி முன் ஆஜரானார்.
அப்போது பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்று கிரகலட்சுமியின் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்குப் பிரசாந்த் தரப்பு வழக்கறிஞர்கள் வழக்கை விரைவாக முடிக்க வேண்டும். இதற்கு வசதியாக அடுத்த மாதம் 22ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கோரினர்.
இரு தரப்பு கோரிக்கைகளையும் கேட்ட நீதிபதி ஆறுமுகம், முதலில் இருவரிடமும் நான் பேச வேண்டும். பிற வழக்குகளை விசாரித்து விட்டு வருகிறேன். அதுவரை காத்திருங்கள் என்று கூறி இருவரையும் காத்திருக்குமாறு அறிவுறுத்தினார்.
பின்னர் பிற வழக்குகளை விசாரித்து விட்டு நீதிபதி தனது அறைக்குச் சென்ற பின்னர் பிரசாந்த்தையும், கிரகலட்சுமியையும் அவர் அழைத்தார். இருவரிடமும் நீதிபதி தனியாகப் பேசினார்.
பிரிவுக்கான காரணங்களை கிரகலட்சுமி விளக்கினார். அதன் பின்னர் நீங்கள் இருவரும் கௌரவம் பார்க்காமல் தனியாக பேசி விட்டு வாருங்கள் என்று கூறி இருவரையும் தனியாக அனுப்பினார்.
இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசிவிட்டு கலங்கிய கண்களுடன் வந்தனர்.
பின்னர் ஜனவரி 3ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார் நீதிபதி, அன்று இருவருக்கும் ஆலோசனை வழங்கப்படும் என்றார்.

No comments:
Post a Comment