நடிகர் விஜய்குமாரின் மகளான நடிகை வனிதா (மேலே உள்ள படத்தில் ) விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கோலிவுட்டில் கலைக்குடும்பம் என வர்ணிக்கப்படும் விஜய்குமார்மஞ்சுளா வீட்டுப் பெண்ணான வனிதா, மாணிக்கம் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். ஆனால், நடிப்பே தெரியாத இவரால் தொடர்ந்து சினிமாவில் நிலைக்க முடியவில்லை. சந்திரலேகா உள்பட சில படங்களில் நடித்ததோடு பீல்ட் அவுட் ஆனார்.
இதன் பின்னர் ஒரு சில டி.வி தொடர்களிலும் நடித்தார். ஒரு தொடரில் நடித்தபொழுது அந்த தொடரின் நாயகனான ஆகாஷ் என்ற ஆனந்துக்கும் வனிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவருக்கும் 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாகவே இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இந் நிலையில் இருவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். சுமூகமாகப் பிரிந்துவிடுவதாக இருவரும் கூறியுள்ளனர்.
இந்த வழக்கு முதலாவது கூடுதல் குடும்பல நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆகாசும் வனிதாவும் ஆஜராகினர். இருவரிடமும் பேசிய நீதிபதி ஆறுமுகம் விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதையடுத்து இருவரும் ஒரே காரில் கிளம்பிச் சென்றனர். இருவரும் சேர்ந்தே வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருவருக்கும் ஒரு குழந்தையும் உள்ளது. சீனாவில் படித்துள்ள வனிதா ஒரு வாஸ்து நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment