600 கல்லூரி மாணவர்களை கொண்ட "மக்கள் போர்ப் படை இயக்கம்' என்ற புதிய தீவிரவாத இயக்கமொன்று இயங்கி வருவதாக பெரியகுளம் அருகே கைது செய்யப்பட்ட தீவிரவாதி அளித்த வாக்குமூலம் பொலிஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கும்பலிடம் கையெறி குண்டுகள், வெடிமருந்துகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பிடிபட்டிருப்பதோடு, ஜாதி யை மையமாக கொண்ட ஒரு அரசியல் தலைவரின் ஆதரவு இருப்பதும் அம்பலமாகி உள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் முருகமலையில் பயிற்சிக்கு வந்த தீவிரவாதிகளில் வேல் முருகன்(வயது 26), பழனிவேல்(வயது 26), முத்துச்செல்வம்(வயது 22) ஆகிய மூன்று பேர் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து ஏராளமான கையெறி குண்டுகள், ஆயுதங்கள், துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது வேல்முருகன் என்பவர் கூறியதாவது: தமிழகத்தில் தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு, "மக்கள் போர்ப்படை இயக்கம்' என்ற புதிய தீவிரவாத இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. இதில், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த 600 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒவ்வொருவருக்கும் நான்கு பெயர்கள், நான்கு முகவரிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, மாவட்டந்தோறும் 20 பேர் முகாமிட்டு பயிற்சி பெற்று வருகின்றனர் என்றார். வெளிமாநிலங்களில் இருந்து ஆயுத உதவி தங்கள் இயக்கத்திற்கு கிடைப்பதாகவும், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் தலைவர் ஒருவர் தங்களுக்கு முழுமையான பொருள் உதவி செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தைகான மூவரையும் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் பெரியகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பொலிஸார் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Monday, 2 July 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment