மாலத்தீவுகள் விசாரணையில் இந்திய, இலங்கை அதிகாரிகள் உதவி
மாலத்தீவுகள் கடற்பரப்பில் அந்த நாட்டு கடலோரக் காவல் துறையினரால் அண்மையில் பிடிக்கப்பட்ட படகில் இருந்த நபர்கள் குறித்த விசாரணையில் இப்போது இலங்கை மற்றும் இந்திய அரசாங்க அதிகாரிகள் உதவுவதாக மாலத்தீவுகள் அரசின் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமது படையினரால் பிடிக்கப்பட்ட 5 பேரில் ஒருவர் மலையாளி என்றும் ஆனால் ஏனைய நான்கு பேரும் தமிழ் பேசுகின்ற போதிலும் இதுவரை அவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்படவில்லை என்றும் மொஹமட் ஹூசைன் ஷெரிப் என்னும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்தவிசாரணையின் முடிவில் விரைவில் அது குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
BBC தமிழோசை
Wednesday, 23 May 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment