ராஜபக்ஷேவுக்கு மாலை--பூசாரி சுட்டு கொலை
பிப்ரவரி 08, 2007
கொழும்பு: அதிபர் ராஜபக்ஷேவுக்கு மாலை அணிவித்த கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
சமீபத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாகரை நகருக்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷே சென்றிருந்தார். அப்போது அவருக்கு செல்லையா பரமேஸ்வரன் என்ற கோவில் குருக்கள் (வயது 60) மாலை அணிவித்து வரவேற்றார்.
இந்த நிலையில் பரமேஸ்வரன் குருக்கள் நேற்று இரவு 8.45 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டம் செந்திவேலி என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத 2 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
செந்திவேலி விநாயகர் கோவிலில் பகல் நேர பூஜைகளை முடித்து விட்டு இரவில் குருக்கள் தனது வீட்டில் ஓய்வாக இருந்தபோது 2 பேர் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர்.
பேச வேண்டும், வெளியே வாருங்கள் என்று குருக்களை அழைத்துள்ளனர். அவரும் வந்துள்ளார். பின்னர் தங்களிடமிருந்த டி56 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இது குறித்து எரவூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தக் கொலைக்கு விடுதலைப் புலிகள் மீது ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
தகவல்
Hindu priest shot dead for garlanding Rajapaksa - Hindustan Times
Hindu priest gunned down in east Sri Lanka, military blames Tamil ... - Internat..
Thursday, 8 February 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment