Thursday, 7 December 2006

SMS

எஸ்எம்எஸ் மூலம் தேங்காய் உடைக்கலாம்

டிசம்பர் 04, 2006

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேங்காய் உடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் விசேஷ நாட்களில் திருப்பதி ஏழுமலையன் கோவிலுக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே நேர்த்தி கடன் செலுத்தலாம்.

நாடு முழுவதிலும் உள்ள செல்போன் வாடிக்கையாளர்கள் 6060 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் ஏழுமலையானுக்கு தோங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்படும்.இத்திட்டத்துக்காக சென்னையைச் சேர்ந்த டெக் ஸோன், திருப்பதியை சேர்ந்த டிசிசி நிறுவனங்கள் தேவஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இவ்விரண்டு நிறுவனங்களும் ஏற்கனவே திருப்பதி ஏழுமலையான் சேவை டிக்கொட்டுகள், தங்கும் விடுதிகள் குறித்த தகவல்களை எஸ்எம்எஸ் மூலம் தெரிவித்து வருகின்றன.இந்நிலையில் வைகுந்த ஏகாதசி, ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருமலைக்கு வர இயலாத பத்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்ள இத்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.எஸ்எம்எஸ் முலம் வேண்டுதலை நிறைவேற்ற விரும்பும் பகத்தர்கள் டிசம்பர் 10ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் தமது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு எஸ்எம்எஸ்க்கும் ரூ. 30 கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கிய நாள்களிலும் இந்த வசதியை பக்தர்களுக்கு ஏற்படுத்தி தர இருப்பதாக தேஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே இன்டர்நெட் மூலம் சேவை டிக்கெட்கள், தங்கும் விடுதிகள், முன்பதிவு, காணிக்கை வழங்குதல் போன்றவற்றுடன் சிடி மற்றும் கேசட் விற்பனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Thatstamil

1 comment:

Anonymous said...

SMS மூலையம் சூனியம் வைக்கலாமா?