தபாலில் ஐயப்பன் கோவில் பிரசாதம்
திருவனந்தபுரம்: புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை தபால் மூலம் பக்தர்கள் பெற கோவில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக திருவாங்கூர் தேவஸ்தான வாரிய¬ம், தபால் துறையும் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரசாதத்தை தபால் மூலம் பெற செயல் அதிகாரி, திருவாங்கூர் தேவஸ்ம் போர்டு, சபரிமலை, பத்தனம்திட்டா, பின்கோடு 689713 என்ற முகவரிக்கு ரூ. 210 பணத்தை மணி ஆர்டர் மூலம் அனுப்ப வேண்டும்.
அப்படி அனுப்புவோருக்கு ஒரு டின் அரவணை பாயாசம், ஒரு பாக்கெட் அப்பம், ஒரு பாக்கெட் பஸ்மம் மற்றும் சந்தன வில்லைகள், 10 மில்லி அபிஷேக நெய், ஒரு பாக்கெட் மாளிகைபுரத்து அம்மனின் மஞ்சள் மற்றும் குங்குமம், ஒரு பாக்கெட் வாவர் சுவாமியின் மிளகு மற்றும் விபூதி, ஒரு ஐயப்பனின் லேமினேட் செய்யப்பட்ட புகைப்படம் ஆகியவை பிரசாதமாக அனுப்பி வைக்கப்படும்.
பக்தர்கள் அனுப்பும் பிரசாதப் பணத்தில் 10 ரூபாய் பக்தர்களின் அன்னதானத்திற்காக செலவிடப்படும். ஜனவரி 10ம் தேதிக்குள் தபால் மூலம் பிரசாதம் பெற மணி ஆர்டர்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thatstamil
Thursday, 7 December 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பக்தர்கள் அனுப்பும் பிரசாதப் பணத்தில் 10 ரூபாய் பக்தர்களின் அன்னதானத்திற்காக செலவிடப்படும்.
அப்ப மீதி 200 ரூபா???? சாமியாரின் பாக்கெட்டினுள்ளோ?
Post a Comment