Wednesday, 13 December 2006

பல் டாக்டர்

நடுத்தர வயது மனிதர் ஒருவர் தனது நண்பரோடு பல் மருத்துவரை பார்க்க சென்றிருந்தார்.

பல் மருத்துவரிடம் அப்பாயின் மென்ட் பெறுவது தொடர்பாக பேசி கொண்டிருந்த அவர், தாறுமாறாக கேள்விகளை கேட்டு மருத்துவரை கோபமடைய செய்தார்.

இறுதியில்மருத்துவர் கோபத்தின் உச்சிக்கு போய் நாளைக்கு 10 மணிக்கு வாருங்கள் பார்த்து கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.

வெளியே வந்ததும் நண்பர் அவரிடம், இப்படி பேசி விட்டீர்களே, நாளைக்கு டாக்டர் ஏதாவது ஏடாகூடமாக செய்து விட்டால் என்னாவது என்றார்.

அதற்கு அவர், என்ன ஆனால் என்ன, என் மனைவிதானே வரப்போகிறார் என்று கூறினார்.

No comments: