
கரூர்: மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கோபால் என்பவர் பல்வேறு சர்க்கஸ் வித்தைகளை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். பள்ளிக்கே செல்லாத கோபால், ஒரு சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்தார். அதன் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து ஒரு மளிகை கடை வைத்தார். போணி ஆகிவில்லை. இதனால் தான் சர்க்கசில் கற்ற வித்தைகளை காண்பித்து வருமானம் ஈட்ட துவங்கினார்.

ஒரு சைக்கிளை கையால் தூக்கிக் கொண்டு, வாயில் ஒரு தவலை (குடம்) தண்ணீரை பற்களால் கடித்து தூக்கிக் கொண்டு மற்றொரு சைக்கிளை ஓட்டுதல், படுத்துக் கொண்டே வேகமாக பைக் ஓட்டுதல், மயிர்க்கூச்செரியும் வகையில் "8' போடுதல் போன்ற வித்தைகளை காட்டி பொதுமக்களை அசத்துகிறார். இவரின் வித்தைகளை பார்த்து பிரமிக்கும் மக்கள் அவரை பாராட்டி பணம் கொடுக்கின்றனர். சாப்பாடு செலவு, தங்கும் இடச் செலவு போக தினசரி 350 ரூபாய்க்கு மேல் இவருக்கு வருமானம் கிடைக்கிறது.
தினமலர்
No comments:
Post a Comment