Monday, 25 December 2006

ரகசிய நிச்சயதார்த்தம்



சென்னை, டிச. 25: நடிகை மாளவிகாவின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் ரகசியமாக நடந்துள்ளது.


‘கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு...’, ‘வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...’ போன்ற பாடல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா. மும்பையை சேர்ந்த இவர், அங்கு தொழிலதிபர் சுமேஷ் என்பவரை காதலித்து வந்தார்.

இதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததும், கடந்த மாதம் 23&ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதை மாளவிகா மறைத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று நிச்சயதார்த்த படங்கள் வெளியாகின. இது குறித்து நேற்று காலை மாளவிகாவிடம் கேட்டபோது, மறுத்தார்.

உடனே அந்த படங்கள் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதை பார்த்ததும் நிச்சயதார்த்தம் நடந்ததை ஒப்புக் கொண்டார். Ôதிருமண தேதி முடிவாகவில்லை. திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன்Õஎன்றார் மாளவிகா.

தினகரன்

No comments: