Saturday, 9 December 2006

சினிமா

கதாநாயகிகள் சோக கதை: அதிகரிக்கும் நடிகைகள் விவாகரத்து

சென்னை, டிச. 9-

நடிகைகள் விவகாரத்து அதிகரிக்கிறது.

திருமணத்துக்கு பின் கணவனை பிரிந்து வாழும் நடிகைகள் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. விவாகரத்து செய்வோரும் பெருகி வருகிறார்கள்.

அண்மையில் மரணம் அடைந்த ஸ்ரீவித்யாவின் கடைசி காலம் கல் நெஞ்சையும் இளக வைக்கும். கணவனை பிரிந்த அவர் கோவிலில் கடைசி நாட்களை ஒட்டினார். பின்னர் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக மூச்சை நிறுத்தினார்.

அம்பிகா கதாநாயகியாக வலம் வந்த காலம் மறக்க முடியாதவை அந்த ஏழு நாட்கள், நான் பாடும் பாடல், சகலகலா வல்லவன், எங்கேயோ கேட்ட குரல், படிக்காதவன் என இவர் நடித்த ஹிட் படங்கள் நிறைய ஆனாலும் திருமண வாழ்க்கை தோற்றது.

லட்சுமி, நளினி, சுகன்யா, சொர்ணமால்யா, அஞ்சு, பானுப்பிரியா, கவுதமி, ஐஸ்வர்யா என இல்லறத்தில் நொடிந்த நாயகிகள் பட்டியல் நீழ்கிறது. வனிதா விஜயகுமாரும் விவகாரத்துக்கு மனு போட்டுள்ளார். மேலும் சில நடிகைகள் வெளியே தெரியாமல் பிரிந்து வாழ்கிறார்கள்.

கதாநாகிகள் வாழ்க்கைத் தான் இப்படி நொறுங்கி கிடக்கிறதே தவிர ஆடை குறைப்பு செய்து அலுக்கி குலுக்கி ஆடிய கவர்ச்சி நடிகைகள் இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக உள்ளனர் என்பது விசேஷம்.

கவர்ச்சிக்கு ஒரு காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர் ஜெயமாலினி. அவர் இல்லற வாழ்க்கை இனிமையாக நடக்கிறது. அவரது மகள் ஜோதி மீனா கவர்ச்சி ஆட்டத்தில் கலக்குகிறார்.

டிஸ்கோ சாந்தி தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்கிறார். ஸ்ரீஹரி மாமியார் வீட்டுக்கு மளிகை சாமான்கள் வாங்கிப்போடுவது வரை எல்லா உதவிகளையும் இன்று வரை செய்துவருகிறாராம். டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதா குமாரி வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜை திருமணம் செய்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகிறார்.

முன்னாள் கவர்ச்சி கன்னி அனுராதா டான்ஸ் மாஸ்டர் சதீஷை திருமணம் செய்து இணை பிரியாமல் வாழ்கிறார். ஒரு விபத்தில் அனுராதா கணவர் கோமா ஸ்டேஜில் பல நாட்கள் படுத்த படுக்கையானார். அப்போது கணவரை குழந்தை போல் பாவித்து அருகில் இருந்து கவனித்து காப்பாற்றினார்.

குடும்ப பாங்காக கதாநாயகர்கள் ஜோடியாக நடித்து பெண்கள் மனதில் இடம் பிடித்த கதாநாயகிகள் வாழ்க்கையும் மோசமாக நடித்து பெண்களை முகம் சுழிக்க வைத்த கவர்ச்சி நடிகைகள் வாழ்க்கையும் நிஜத்தில் உல்டாவாக மாறி இருப்பது வியப்பான விஷயம்.

இன்னொரு புறம் காதல் தோல்வியால் கதாநாயகிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் அதிகமாகியுள்ளது.

தற்கொலை முயற்சியை தடுக்கவும் குடும்ப வாழ்க்கையை இனிமைப்படுத்தவும் நடிகர் நடிகைகளுக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்த நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

மாலைமலர்

No comments: