Thursday, 30 November 2006

பேசும் செல்போன் மோட்டரோலா அறிமுகம்

புதுடெல்லி, நவ. 30:

படிக்காதவர்கள், பார்வையற்றவர்களுக்கு உதவும் பேசும் செல்போனை குறைந்த விலையில் மோட்டரோலா அறிமுகம் செய்துள்ளது. தமிழ் உட்பட பல மொழிகளில் இந்த போன் பேசும். மோட்டோபோன் என்ற பெயரில் இதை உலகம் முழுவதும் மோட்டரோலா நேற்று அறிமுகம் செய்தது. அதை இந்தியாவில் சென்னையில் அமைய இருக்கும் தனது தொழிற்சாலையில் மோட்டரோலா அதிகளவில் தயாரிக்க உள்ளது.

அதிநவீன வசதிகள் கொண்ட இந்த போனின் விலை மிகக் குறைவு என்பதுதான் சிறப்பம்சம். 9 மில்லி மீட்டர் அகலமே கொண்ட மோட்டோபோன், ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ என இரண்டு தொழில்நுட்பங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

படிக்காதவர்கள், பார்வையற்றவர்களும் எளிதில் பயன்படுத்தும் வகையில் இதன் மெனு விவரங்கள் எழுத்தில் மட்டுமின்றி குரலிலும் தெரிவிக்கப்படும்.
தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, வங்காள மொழிகளில் இந்த வசதி கிடைக்கும்.

உதாரணமாக, போன் டயரியில் ஒரு எண்ணைத் தேட வேண்டும் என்றால்... மெனுவை அழுத்தியதும் ஒலி வகைகள், போன் புக், அலாரம் என வரிசையாக பட்டியலிடும்.

போன் புக் என்றதும் அழுத்தினால், அதில் உள்ள பெயர்கள், போன் எண்களை வரிசையாக குறிப்பிடும். அதில் தேவையான எண்ணை டயல் செய்யலாம்.
சூரிய ஒளியிலும் தெளிவாக தெரியக்கூடிய டிஸ்பிளே, ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 மணி நேரம் பேசும் வசதி கொண்டது மோட்டோபோன். போன் விலை ரூ.1600.

நன்றி: தினகரன்

No comments: