டெல்லி: தொலைக் காட்சிகளில் இரவு 11 மணிக்கு மேல் வயது வந்தோருக்கு மட்டுமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி வழங்கவுள்ளது.
ஆபாசக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தற்போது மத்திய செய்தி ஒளிபரப்புத் துறையின் தடை உள்ளது. ஆனாலும் இதை மீறி எப் டிவி உள்ளிட்ட சில சேனல்களில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தன. இதையடுத்து சமீபத்தில் ஏஎக்ஸ்என், எப் டிவி ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்த நிலையில் மாறி வரும் உலக மனோபாவத்திற்கு ஏற்ப தொலைக்காட்சிகளில் நள்ளிரவுக்கு மேல் ஆபாசக் காட்சிகள் அடங்கிய நிகழ்ச்சிகளைக் காட்டிக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
இதையடுத்து இந்தக் கோரிக்கையை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. தற்போது ஆபாசக் காட்சிகளுடன் கூடிய நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் காட்ட பச்சைக் கொடி காட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கிளுகிளுப்பூட்டும் காட்சிகள் அடங்கிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி வழங்கவுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
முற்றிலும் வயது வந்தோர் மட்டுமே பார்க்கக் கூடிய நிகழ்ச்சிகளை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி அளிக்கவுள்ளது.
இதுதொடர்பான சட்டத் திருத்த மசோதா வருகிற மழைக்காலக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தற்போதே மா டிவி உள்ளிட்ட சில டிவிகளில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் கிளுகிளுப்பூட்டும் காட்சிகள் அடங்கிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
தெலுங்கு சேனலான மா டிவியில் உடலுறவுக் காட்சிகளை மட்டும்தான் காட்டவில்லை. மற்றபடி கிளுகிளுப்பூட்டும் வகையிலான காட்சிகளை சனிக்கிழமை தோறும் படு ஜிலுஜிலுப்பாக காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Wednesday, 4 July 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment