Wednesday, 23 May 2007


அவுஸ்திரேலிய குடியுரிமை பெற கடுமையான புதிய பரீட்சை நடைமுறை.

[Tuesday May 22 2007 02:33:54 PM GMT] [Naffel]

அவுஸ்திரேலியாவின் குடியுரிமை வழங்குவதற்கான பரீட்சைகளின் ஒரு கட்டமாக விளையாட்டு மற்றும் அவுஸ்திரேலிய வரலாறு தொடர்பான குறும் கேள்வி பரீட்சையும் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் ஆங்கில அறிவும் பரீட்சிக்கப்படவுள்ளது.
இந்த புதிய பரீட்சை நடைமுறைகளை இவ்வருட இறுதியில் நடைமுறைப்படுத்த அவுஸ்திரேலியா எதிர்பார்த்துள்ளது. இப்புதிய குடியுரிமை பரீட்சை நடைமுறைகளானது ஆங்கிலம் பேசாத குடியேற்றவாசிகளுக்கு பெரும் சவாலாக அமையும் என அஞ்சப்படுகின்றது. இப்புதிய குடியுரிமை நடைமுறைகளின் பிரகாரம் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்கள் அந்நாட்டு மக்களின் கலாசார பாரம்பரியங்கள் மற்றும் அவுஸ்திரேலிய தேசியக் கொடியின் வர்ணங்கள் என்பன தொடர்பாக போதிய அறிவைப் பெற்றிருப்பது அவசியம். அத்துடன் இதன்போது புவியியல், அரசியல் என்பனவற்றுடன் விளையாட்டுகள் தொடர்பான அறிவும் பரீட்சிக்கப்படும். குடியுரிமைக்கான இந்த பரீட்சைகள் சமூக அமைதியையும் ஒருங்கிணைப்பையும் ஊக்குவிக்க உதவும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹொவார்ட் தெரிவித்தார். இப்பரீட்சையில் தோல்வியடைபவர்கள் மீள பரீட்சைக்கு தோற்ற முடியும். சித்தியடைவதற்கு 60 புள்ளிகள் வரை பெறுவது அவசியம். எனினும் குறைந்த கல்வியறிவுடையவர்களுக்கும் ஆங்கிலத்தை முதல் மொழியாக கொண்டிராதவர்களுக்கும் அவுஸ்திரேலிய குடியுரிமை பெற இப்புதிய நடைமுறை பெரும் தடையாக அமையும் என நம்பப்படுகின்றது.

Tamilwin

No comments: