Sunday, 17 December 2006

தீ

வாலிபர் ஒருவர் தீயணைப்பு நிலையத்துக்கு போன் செய்தார். அவரது குரல் மிகவும் பதட்டமாக இருந்தது. தீயணைப்பு வீரர் அவரிடம் என்ன செய்தி என்று கேட்டார். வாலிபர், தன்னுடைய வீட்டில் தீப்பிடித்துக்கொண்டதாக கூறினார்.
தீயணைப்பு வீரர், உங்கள் வீடு எங்கிருக்கிறது என்று கேட்டார். அதற்கு வாலிபர், நான் மிகவும் பதட்டமாக இருக்கிறேன். முகவரி எனக்கு நினைவில் வர மறுக்கிறது என்றார்.
உடனே தீயணைப்பு வீரர் அப்படியென்றால் நாங்கள் எப்படி வருவது என்று கேட்டார். வாலிபர், கோபமான குரலில் முட்டாளே உங்கள் வாகனத்தில் தான் வரவேண்டும். அதுகூட தெரியாதா என்றார்.

No comments: