நமீதா ரொம்ப சோகமாக உள்ளார். எல்லாம் ஒரு காக்காவால் வந்த வினைதான்.

சூரத் சுந்தரி நமீதா நுங்கம்பாக்கத்தில் வீடு எடுத்துத் தங்கி கலைச் சேவை செய்து வருகிறார். நமீதா மட்டும் இங்கே தனியாக இருக்கிறார் (துணைக்கு தோஸ்து பரத் கபூரும் இருக்கிறார்!). தனது குடும்பத்தினரைப் பார்க்க அவ்வப்போது சொந்த ஊரான சூரத்துக்கு போய் வருவது நமீயின் வழக்கம்.
இந்த முறை நமீயின் அண்ணன் தனது குடும்பத்தோடு தங்கச்சியைப் பார்க்க சென்னைக்கு வந்துள்ளார். நமீதாவின் அண்ணனுக்கு யாஷி என்ற 1 வயது மகள் உள்ளார்.
மருமகளைத் தூக்கிக் கொஞ்சிய அத்தை நமீதா, அவளைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது குட்டிப் பாப்பாவை அமர்த்தி பிஸ்கட் ஊட்டியுள்ளார்.
அப்போது கையில் இருந்த மொபைல் போனை கார் மீது வைத்து விட்டு பிஸ்கட் ஊட்டிக் கொண்டிருந்தார். அந்த சமயம் நமீதாவைச் சுற்றி ஏராளமான காக்கைகள் கூடி விட்டன. என்னடா இது நம்மைச் சுற்றி இத்தனை காக்காக்கள் என்று நமீதாக்கா குழம்பியுள்ளார்.
அப்புறம்தான் தெரிந்தது கையில் இருந்த பிஸ்கட்தான் காக்கைகளை ஈர்த்தது என்று. பிஸ்கட்டுகளைப் பார்த்து கத்தியவண்ணம் இருந்த காகங்கள், கார் மீது நமீதா வைத்திருந்த அவரது குட்டி செல்போனைப் பார்த்து அதை நோக்கிப் பறந்து வந்தன.
கண் இமைக்கும் நேரத்தில் அந்த செல்போனைக் கவ்விக் கொண்டு ஒரு காக்கா பறந்து விட்டதாம். காக்கா தனது செல்போனை தூக்கிச் சென்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து போன நமீதா, அதைப் பறிக்க முயன்றாராம். காக்காவா, கொக்கா? நமீயின் முயற்சி பலனளிக்கவில்லை.
இதையடுத்து வீட்டுக்குள் போய் பாப்பாவை விட்டு விட்டு காரை எடுத்துக் கொண்டு அக்கம் பக்கம் போய் செல்போன் எங்காவது கிடக்கிறதா என்று பார்த்துள்ளார். ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை செல்போனைக் காணவில்லை.
காரும், கவலையுமாக நமீதா வந்ததைப் பார்த்து அந்தப் பகுதியினர் நமீதாவை வேடிக்கை பார்த்ததுதான் மிச்சம். இதனால் சோகமாக வீட்டுக்குத் திரும்பினார் நமீதா. வந்தவுடன் தனது செல்லுக்கு போன் செய்து பார்த்தார். வெறும் ரிங் டோன் மட்டுமே சென்றது. போனை யாரும் எடுக்கவில்லை.
இதையடுத்து செல்போன் நிறுவனத்துக்குப் போன் செய்து நம்பரை முடக்கச் செய்தாராம். செல்போன் பறிபோனதால் நமீதா ரொம்பக் கவலையாகி விட்டாராம். காரணம், அதில் பல முக்கியமானவர்களின் எண்கள் உள்ளதாம். தயாரிப்பாளர்கள் எல்லோரும் இந்த எண்ணில்தான் தொடர்பு கொள்வார்களாம்.
எனக்கு ரொம்ப ராசியான நம்பருங்க இது. முக்கியமான பல எண்களை இதில்தான் வைத்திருந்தேன். இப்படி காக்கா தூக்கிப் போய் விட்டது வருத்தமாக இருக்கிறது என்று புலம்புகிறார் நமீதா.
நமீதாவுக்கு இப்போதெல்லாம் காக்கா கத்துவதைக் கேட்டால் கூட செல்போன் ரிங் டோன் போலவே கேட்கிறதாம்!
அந்தோ பரிதாபம்!
Thatstamil
No comments:
Post a Comment