Friday, 15 December 2006

ஒரு பக்தரின் வினோத நேர்த்திக் கடன்


விருதுநகர், டிச.11: விருதுநகர் மாரியம்மனுக்கு பக்தர் ஒருவர் வித்தியாசமான முறையில் தலையில் ஆணி அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினார். மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் கண்ணன் (40). இவர் விருதுநகர் மாரியம்மனுக்கு தலையில் ஆணி அடித்து வருவதாக நேர்ந்துள்ளார். அதன்படி தனது தலையில் 2 இஞ்ச் இரும்பு ஆணியை உச்சந்தலையில் அடித்து, நெற்றியில் விபூதி பூசி தனது அன்றாடப் பணிகளைச் செய்து வந்துள்ளார்.

30 நாள்கள் முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை தனது நேர்த்திக் கடனை செலுத்த விருதுநகர் ஸ்ரீ பராசக்தி அம்மன் கோயிலுக்கு வந்த அவர், தனது தலையில் இருந்த ஆணியை எடுத்துவிட்டு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

தினமணி

No comments: