புலிகளிடமிருந்து இராணுவ வீரர் மீட்கப்பட்ட உண்மையான கதை இது தான்
[19 - December - 2006]
சுமார் 68 நாட்களாக புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளால் விலங்கிடப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ வீரர் கே.எம்.எஸ். ரத்நாயக்க கடந்த 13 ஆம் திகதி புலிகள் இயக்க முகாம் ஒன்றிலுள்ள சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். புலிகள் இயக்கத்தினருக்கும் கருணா குழுவினருக்கும் இடையே நடந்த மோதல்களின் போது காயங்களுக்குள்ளான இந்த இராணுவ வீரர் பின்னர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேற்படி இராணுவ வீரர் ரத்நாயக்கவை புலிகள் இயக்கத்தினர் கடந்த ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி பிடித்தனர். இது நிகழ்ந்தது சம்பூருக்கு அருகிலுள்ள மாங்கேணி பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தினருக்கு எதிராக அரச படையினர் மேற்கொண்ட தாக்குதல்களின் போதாகும். அன்று இராணுவ மேஜர் ஒருவர் உட்பட 11 இராணுவத்தினர் புலிகள் இயக்கத்தினரின் தாக்குதல்களில் உயிரிழந்தனர். அப்போது இராணுவ வீரர் ரத்நாயக்க காயங்களுக்குள்ளாகியிருந்த நிலையில் புலிகள் இயக்கத்தினர் அவரைக் கைது செய்தனர்.
இதேவேளை வாகரைப் பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தினர் சுமார் 35 பொது மக்களை மனித கேடயமாகப் பயன்படுத்தி சேருநுவர, கஜுவத்த, மாங்கேணி ஆகிய கிராமங்களுக்கு ஆட்டிலறி, மோட்டார் தாக்குதல்களை ஆரம்பித்தனர். இந்தச் சந்தர்ப்பங்களில் அரச படையினரும் வாகரைப் பிரதேசத்திலுள்ள புலிகள் இயக்கத்தினருக்கு எதிராக விசேட தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். புலிகள் இயக்கத்தினரால் பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த பொது மக்களை விடுவிப்பதற்காகவே படையினர் மேற்படி விசேட அதிரடித் தாக்குதல்களை ஆரம்பித்திருந்தனர். இந்தச் சந்தர்ப்பங்களில் முன்னர் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் ரத்நாயக்க புலிகள் இயக்கத்தினரின் பாதுகாப்பிலேயே இருந்துள்ளார்.
இதேவேளை, கடந்த 13 ஆம் திகதி கருணா குழுவினருக்குக் கிடைத்த உளவுத் தகவல்களுக்கேற்ப, அரச படையினர் அடிக்கடி வாகரையில் மேற்கொண்டு வந்த தீவிர தாக்குதல்கள் காரணமாக புலிகள் இயக்கத்தினர் மியான்குளம் பகுதியிலிருந்து தொப்பிகல பகுதிக்கு வந்துகொண்டிருப்பதாக அறிந்து கொண்டனர்.
இவ்வாறு மியான்குளத்திலிருந்து வந்து கொண்டிருந்த புலிகள் இயக்கத்தினர் மட்டக்களப்பு- பொலனறுவை வீதி ஊடாகவே கடந்து தொப்பிகலவுக்குச் செல்ல வேண்டும். எனவே, குறித்த உளவுத் தகவல்களைத் தொடர்ந்து கருணா குழுவினர் புலிகள் மீது தாக்குதலைத் தொடுப்பதற்காக மட்டக்களப்பு - பொலன்னறுவ பிரதான வீதியில் 117 ஆம், 118 ஆம் மைல் கல் பகுதிகளுக்கிடையே தயாராக நின்றனர். அன்று இரவு சுமார் 8.45 க்கும் 9 மணிக்கு இடையேயுள்ள வேளை அந்தப் பிரதேசமே நிசப்தமாக இருந்தது. பாரிய மரங்கள், கட்டடங்கள் இல்லாத அந்த வீதியில் சிறிய மரங்களும் புல்லுப் பற்றைகளும் மட்டுமே இருந்தன.
புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் அந்த வீதியில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சுமார் 150 பயங்கரவாதிகள் இருந்தனர். கருணா குழுவினர் உடனடியாக அவர்கள் மீது அதிரடியாக கடுமையான சூட்டுத் தாக்குதல்களைத் தீவிரமாகத் தொடுத்தனர். இவ்வாறு கருணா குழுவினர் தாக்கிய வேளையில் புலிகள் இயக்கத்தினருடன் இராணுவ வீரர் ரத்நாயக்கவும் இருந்தார். அவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் கூட்டி வரப்பட்டிருந்தார். அவருடைய திசையிலும் கருணா குழுவினர் தீவிரமான சூட்டுத் தாக்குதலை நடத்திய போது, ரத்நாயக்க உடனடியாக "நான் இராணுவ ஆள் சுட வேண்டாம்" என்று பலமாகக் கத்தினார். தாக்குதல்களின் மத்தியில் அதைக் கேட்டு உடனே எச்சரிக்கையடைந்த கருணா குழுவினர், ரத்நாயக்கவை இராணுவ வீரர் என அடையாளம் கண்டு உடனே அவரைத் தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். ஆயினும் இந்த வேளையில் ரத்நாயக்க கடும் காயங்களுக்குள்ளாகியிருந்தார். இதன் காரணமாகவே அவரை கருணா குழுவினர் மாங்கேணி இராணுவ முகாமில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர். இவ்வாறு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட ரத்நாயக்க பின்னர் பொலன்னறுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இவ்வாறு கருணா குழுவினர் மேற்கொண்ட தாக்குதல்களின் போது கொல்லப்பட்ட ஏழு புலிகள் இயக்கத்தினரது சடலங்களையும் கருணா குழுவினர் பொலன்னறுவ வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இந்தத் தாக்குதல்களில் புலிகள் இயக்கத்தினரிடமிருந்து ரீ.56 ரக துப்பாக்கிகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை கருணா குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், இத் தாக்குதல்களின் போது புலிகள் இயக்கத்தினர் வாகரை தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து மல்ரி பரல், பீரங்கிகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கருணா குழுவினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கடந்த 13 ஆம் திகதி கருணா குழுவினர் மேற்கொண்ட தாக்குதல்களின் போது உயிர் தப்புவதற்காக மரங்களில் ஏறி ஒளிந்திருந்த பல புலிகள் இயக்கத்தினரைப் பின்னர் கருணா குழுவினர் கைது செய்துள்ளனர்.
லங்காதீப 17/12/2006
தினக்குரல்
Tuesday, 19 December 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment