கிளிண்டனைக் கவர்ந்த இடியாப்பம்!
டிசம்பர் 02, 2006
சென்னை: கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட் தாழங்குடா கிராமத்திற்கு வருகை தந்த அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன், அங்கு செல்லும் முன்னர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நம்ம ஊர் இடியாப்பத்தையும், கோழிக் குழம்பையும் ருசி பார்த்து விரும்பிச் சாப்பிட்டார்.
ஐ.நா. சுனாமி நிவாரண குழுத் தலைவராக தற்போது கிளிண்டன் உள்ளார். சுனாமியால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளுக்கு அவ்வப்போது விஜயம் செய்து அங்கு சுனாமி நிவாரணப் பணிகள், சீரமைப்புப் பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்பது குறித்து நேரில் சென்று ஆய்ந்து வருகிறார்.
கடந்த ஆண்டு நாகை மாவட்டத்திற்கு கிளிண்டன் வருகை தந்தார். அப்போது தமிழக அரசின் சுனாமி நிவாரணப் பணிகளை அவர் பாராட்டினார். நாகை மாவட்ட ஆட்சித் தலைவராக அப்போது இருந்த ராதாகிருஷ்ணனையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.
இந்த நிலையில், நேற்று கடலூர் மாவட்டம் தாழங்குடா சென்று அங்கு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளைப் பார்வையிட்டார். பின்னர் சுனாமியால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை சந்தித்து உரையாடினார்.
முன்னதாக சென்னை வந்த கிளிண்டன் அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். கிளிண்டனுக்கு அங்கு சிறப்பான உபசரிப்புகள் தரப்பட்டன. அவருக்குப் பிடித்தமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
நம்ம ஊர் இடியாப்பம், கோழிக் குழம்பு, நண்டு வறுவல் ஆகியவற்றுடன் சில கேரள வகை உணவுகளும் கிளிண்டனுக்குப் பரிமாறப்பட்டன.
இடியாப்பத்தையும், கோழிக்கறி மற்றும் கோழிக் குழம்பையும் கிளிண்டன் ரசித்து, ருசித்துச் சாப்பிட்டார். ஹோட்டல் ஊழியர்கள் அனைவருடனும் கை குலுக்கி அவர்களுடன் படு சகஜமாக பேசினார்.
தகவல்
Saturday, 2 December 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment